news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

தீய சக்தி vs தூய சக்தி, வாழ்க்கை ஒரு வட்டம், "ஸ்வீட்டான ஸ்டாலின் அங்கிள்"

அனல் பறந்த முதல்வர் விஜய் பரப்புரை

38

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பிரச்சாரம் செய்த முதலமைச்சர் விஜய், ’தூய சக்தி தவெகவுக்கும், தீய சக்தி திமுகவுக்கும் தான் போட்டியே,’ என்றார்.

அதோடு, ’தேர்தலில் தோற்றாலும், வெற்றி பெற்றாலும் திமுக தலைவர் ஸ்டாலின் தான் ஸ்வீட்டான அங்கிள்,’ என்றதோடு, திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.

"திமுகவின் கிளை கழகம் அதிமுக"
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, தவெக ஆட்சிக்கு வரக்கூடாது என நினைக்கும் திமுகவின் கிளை கழகமாக அதிமுக செயல்படுவதாக கடுமையாக விமர்சித்தார்.

மதுராந்தகம் இடைத்தேர்தல்... முதல்வர் சவால்
மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, முதல்வரும் தவெக தலைவருமான விஜய், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு, பேசியதாவது;
இதுவரை ஊழலே செய்தது இல்லை என்று திமுகவால் சொல்ல முடியுமா? இல்லை, இனிமேல் ஊழலே செய்ய மாட்டோம் என்று திமுகவால் வாக்குறுதி அளிக்க முடியுமா?

முதல்வராக வரவில்லை
முதல்வராக நான் இன்று வரவில்லை, இடைத்தேர்தலுக்காக ஓட்டு கேட்டு வந்து உள்ளேன். எப்பவும் போல் உங்கள் வீட்டு மகனாக அண்ணனாக தம்பியாக வந்துள்ளேன். உங்கள் விஜய் முதல்வராக கூடாதா? ஒரு சாமானிய கட்சியான தவெக ஆட்சியமைக்க கூடாதா? லஞ்சம், ஊழலை ஒழிக்க, பெண்கள், குழந்தைகளை பாதுகாக்க உங்கள் விஜய் முதல்வராக வரக்கூடாதா?

கேள்வி மு.க.ஸ்டாலினுக்கு மட்டும் தான்
த.வெ.க.வின் கேள்வி, எப்போதுமே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டும் தான். ஸ்டாலின் அங்கிள் எப்போதும் எனக்கு இனிப்பான அங்கிள் தான். தமிழ்நாட்டு மக்களுக்கும் எனக்கும் உள்ளது பாசக்கணக்கு, அன்பு கணக்கு. திமுக மற்றும் பலரால் இந்த உறவை பிரிக்க எதுவும் செய்ய முடியாது.

எம்.ஜி.ஆர்.தொண்டர்களுக்கு என்றும் துணை
திமுக உடன் சேர்ந்து ஆட்சி அமைக்க இபிஎஸ் போட்ட திட்டத்தை தாங்க முடியாமலேயே, மரகதம் குமரவேல் ராஜினாமா செய்தார். எம்.ஜிஆர் தொண்டர்களுக்கு என்றும் நான் துணை நிற்பேன். த.வெ.க. ஆட்சி கலையும் என்று நினைப்பவர்களின் கனவு தான் கலைந்து போகும். மக்களோடு, மக்களாக நிற்கும் த.வெ.க.வை தொட்டுப் பார்க்க நினைக்க வேண்டாம்.

தி.மு.க.மீது முதலமைச்சர் கடும் தாக்கு
ஜெம் வீரமணி பாலியல் வழக்கை திமுக ஆட்சியில் திட்டமிட்டு மறைத்து உள்ளனர். பாலியல் வழக்கில் கூட நடவடிக்கை எடுக்காமல் என்ன அரசியலை செய்கிறீர்கள்?

கரியை பூசிய மக்கள்
முதல்வா் என்பவா் மக்களுக்கு முதலாளி அல்ல, சா்வன்ட் தான், ஆனால் தமிழ்நாட்டிற்கே முதலாளி போல் ஸ்டாலின் பேசுகிறாா். நான் கடன் வாங்குகிறேன், அது மக்களுக்காக தான், உங்களைப்போல் கொள்ளை அடிப்பதற்காக அல்ல. இலவச சிலிண்டா் விவகாரத்தில் மக்களை தூண்டிவிட்டு கேள்வி எழுப்ப திமுக திட்டமிட்டது, ஆனால் மக்கள் அவர்களது முகத்தில் காியை பூசினா்.

சொந்த பணத்திலா?
ஆய்வுக்கு சென்றால், நாங்கள் கட்டிய பாலத்தின் மீது நின்று ஷுட்டிங் எடுக்கிறார் விஜய் என விமர்சிக்கிறார் ஸ்டாலின். நீங்கள் என்ன உங்கள் சொந்த பணத்திலிருந்தா பாலம் கட்டினீர்கள்? அல்லது கணக்கில் காட்டாத பணத்தை வைத்து கட்டினீர்களா?

தமிழகத்தில் ஆபாச நதி
நாட்டில் ஒரே ஆபாச நதியாக ஓடிக்கொண்டிருப்பதை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறாா்கள்.

திமுகவில் பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் ஆபாசமாக பேசுவதை மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருக்கிறாா்கள். ஜெயலலிதாவை தவறாக பேசியவர்களுடன் இணைந்து ஆட்சியமைக்க நினைத்தபோது மற்றும் பலரின் முகமூடி கிழிந்துவிட்டது.

வாக்களியுங்கள்
மதுராந்தகம் தொகுதி மக்களே தவெக சார்பாக நம் சகோதரி நம்வீட்டு பெண் என் தங்கை மரகதம் குமரவேலுக்கு வாக்களியுங்கள்.

விசில் சின்னத்திற்கு வாக்களித்து பெண்களை அவதூறாக பேசுவோருக்கு பதிலடி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு பேசி, முதல்வரும் தவெக தலைவருமான விஜய் வாக்கு சேகரித்தார்.

Related Link
56ஆவது படபூஜையா? அரசியல் என்ட்ரியா? அதிரவிட்ட தனுஷ் ரசிகர்கள்

56ஆவது படபூஜையா? அரசியல் என்ட்ரியா? அதிரவிட்ட தனுஷ் ரசிகர்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சினிமாவில் ஏற்பட்ட அதிர்ச்சி அனுபவம் பற்றி டாப்ஸி வேதனை

25
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved