Also Watch
Read this

ஆசிய விளையாட்டு போட்டியின், மகளிர் கபடி போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.
இந்தியா vs ஈரான்
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஈரான் அணியை எதிர்கொண்ட இந்திய அணி, அபாரமாக விளையாடி 37-34 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. அதே போல் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா - வேலவன் செந்தில்குமார் இணை வெண்கல பதக்கம் வென்றது.

முதல்வர் விஜய் வாழ்த்து
ஆசிய விளையாட்டுப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக ஸ்குவாஷ் வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமாருக்கு வாழ்த்துக்களை முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமாருக்கு ஊக்கத்தொகை
தமிழக அரசின் ஊக்கத்தொகையாக 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்து உள்ளார். திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழக அரசு உறுதுணையாக நிற்கும் என உறுதியளித்ததோடு, அவர்கள் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு வெள்ளி
மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3-பொசிஷன்ஸ் அணிப் பிரிவில் இந்தியாவின் திலோத்தமா சென், விதர்சா வினோத் மற்றும் ஆஷி சௌக்ஸி அடங்கிய கூட்டணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது. இந்திய அணி மொத்தம் 1763 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. சீனா 1773 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை வென்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved