news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

56ஆவது படபூஜையா? அரசியல் என்ட்ரியா? அதிரவிட்ட தனுஷ் ரசிகர்கள்

தென் மாவட்டங்களை குறிவைக்கும் தனுஷ்?

35

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில், நடிகர் தனுஷை வரவேற்க, அவரது ரசிகர்கள் பெருங்கூட்டமாக திரண்டது, உற்று நோக்க வைத்துள்ளது. திரையுலகை தாண்டி அரசியல் களத்திலும் உற்றுநோக்கப்படும் நட்சத்திரமாக உருவெடுத்துள்ள நடிகர் தனுஷின் சமீபத்திய நகர்வுகள், சினிமா விளம்பரமா அல்லது அவரது அரசியல் வருகைக்கான பிள்ளையார் சுழியா? என்ற விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரையில் தனுஷ்
மதுரை விமான நிலையத்தில் நள்ளிரவு வேல் கொடுத்து தனுஷை வரவேற்ற ரசிகர்கள் கூட்டம், சிவகங்கையில் திரைப்பட பூஜை நிகழ்ச்சியிலும் திரண்டு படக்குழுவினரையே மிரளவிட்டனர்.

சிவகங்கையில் கறிவிருந்து
சிவகங்கை மாவட்டம், திருப்பாசேத்தி அருகே உள்ள புகழ்பெற்ற மாரநாடு கருப்பணசாமி கோயிலில் தனுஷ் நடிக்கும் 56ஆவது திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, ப்ரீத்தி முகுந்தன், காளி வெங்கட் உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிலையில், படம் வெற்றி பெற வேண்டி தனுஷ் சார்பில் 18 அடி நீளப் பிரம்மாண்ட அரிவாள் காணிக்கையாக செலுத்தப்பட்டது.

மேலும், ’பாரிவேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு,’ என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைத்து, 16 கிடாக்கள் வெட்டி பிரம்மாண்ட கறிவிருந்து வழங்கியதால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

தலைவா, தலைவா...
இதனையடுத்து ரசிகர்களை சந்தித்து நடிகர் தனுஷ் பேசியபோது, அவரை பேசவிடாமல், ’தலைவா, தலைவா,’ என கூச்சலிட்டு ரசிகர்கள் அதிர விட்டனர். முன்னதாக மதுரை விமான நிலையத்தில் நடிகர் தனுஷ்க்கு, அவரது ரசிகர்கள் தடபுடலான வரவேற்பு கொடுத்தனர். அப்போது பெண் ரசிகை வழங்கிய வேல் ஒன்றை புன்னகையோடு பெற்றுக்கொண்டார் தனுஷ்.

அரசியல் பிம்பத்திற்கான குறியீடா?
தனுஷை பார்ப்பதற்கு ரசிகர்கள் திரண்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவிய நிலையில், இது வெறும் அன்பா அல்லது அரசியல் பிம்பத்திற்கான குறியீடா? என கேள்வி எழுந்திருக்கிறது. ஏற்கனவே தனுஷ் ரசிகர் மன்றத்தின் புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்ட போதும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ’ரசிகர் சக்தியை வெறும் சினிமாவுக்கு மட்டும் பயன்படுத்தாமல் மக்கள் நலப் பணிகளுக்கு பயன்படுத்துங்கள்,’ என்று அவர் பேசியபோதும் அரசியல் என்ட்ரி குறித்த ஊகங்கள் எழுந்தன.

தென் மாவட்டங்களில்...
இதுவரை கட்சி தொடங்குவதையோ, தேர்தலை எதிர்கொள்வதையோ குறித்து தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், அவரது நகர்வுகள் அரசியல் கணக்குகளை நோக்கியே இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தேனி சங்கராபுரம் கருப்பசாமி கோயிலில் குடும்பத்துடன் வழிபாடு நடத்திய தனுஷ், தற்போது பட பூஜைக்கு மாரநாடு கோயிலைத் தேர்ந்தெடுத்திருப்பது அவரது கோயில் செண்டிமெண்ட் என்பதையும் தாண்டி, தென் மாவட்டங்களில் தனது பிம்பத்தை கட்டமைக்கும் உத்தியாகவும் பார்க்கப்படுகிறது.

பிள்ளையார் சுழியா?
கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய விருது பெற்றுவந்த அவரிடம் அரசியல் என்ட்ரி குறித்து கேள்வி கேட்டபோது, பதில் சொல்லாமல் ரஜினி ஸ்டைலில் சிரித்துவிட்டு சென்றார்.

ஆன்மீக செண்டிமெண்ட், தென் மாவட்ட ரசிகர்கள் ஆதரவு, ரசிகர் மன்ற சீரமைப்பு என தனுஷ் வைக்கும் ஒவ்வொரு அடியும் தமிழக அரசியலின் அடுத்த அத்தியாயத்திற்கான பிள்ளையார் சுழியா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Link
50 ஆண்டுகால இசை பயணம், இசைஞானிக்கு கவுரவம்

50 ஆண்டுகால இசை பயணம், இசைஞானிக்கு கவுரவம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சினிமாவில் ஏற்பட்ட அதிர்ச்சி அனுபவம் பற்றி டாப்ஸி வேதனை

25
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved