Also Watch
Read this
ஜார்க்கண்ட் மாநிலத்தில், மதுக்கடையில் புகுந்து சரக்கு அடித்துவிட்டு, குரங்கு ஒன்று அங்கேயே படுத்து தூங்கியுள்ளது. இந்த விசித்திரமான சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மதுக்கடையில் புகுந்த குரங்கு
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே உள்ள ஓர்மாஞ்சி, பிளாக் சவுக் பகுதியில் வழக்கம்போல, மதுக்கடை ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாகப் பெண் குரங்கு ஒன்று கடைக்குள் திடீரென நுழையவே, அங்கு நின்றிருந்த ஊழியர்களும் பொதுமக்களும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போயுள்ளனர்.

மதுபோதை தலைக்கேறி...
கடைக்குள் அங்கும் இங்குமாக உலா வந்த அந்த குரங்கு, அங்கிருந்த ஒரு மது பாட்டிலைக் கையில் எடுத்து, சாவகாசமாகக் குடிக்கத் தொடங்கியுள்ளது. மதுவைக் குடித்து முடித்த சில நிமிடங்களிலேயே, போதை தலைக்கேறியதால் கடைக்குள்ளேயே ஒரு ஓரமாகச் சாய்ந்து ஆழ்ந்த உறக்கத்திலும் மூழ்கியுள்ளது.

வனத்துறையினருக்கு தகவல்
இந்த விசித்திரமான காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள், குரங்கை வெளியேற்ற முடியாமல் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர், உறங்கிக் கொண்டிருந்த குரங்கை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வைரல் ஆன காட்சி
மதுக்கடையை தன் சொந்த வீடாக நினைத்து ஜாலியாகக் குடித்துவிட்டுத் தூங்கிய அந்த குரங்கின் செயல், தற்போது இணையத்தில் வைரலாகி அப்பகுதி மக்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved