news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

இந்திய பயனர்களுக்கு இலவச International Roaming

Gemini AIல் புதிய வசதி

30

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இந்திய பயனர்களுக்கு இலவச International Roaming

சுமார் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் International Roaming அம்சத்தை இந்திய பயனர்களுக்கு இலவசமாக வழங்க Vi நிறுவனம் முடிவு செய்துள்ளது.

வெளிநாடு செல்லும் போது...
குறிப்பிட்ட Postpaid திட்டங்கள் மற்றும் வருடாந்திர Prepaid திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்களில் International Roaming அம்சத்தை ஆண்டுக்கு 3 முறை இலவசமாக வழங்க உள்ளது. வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்திய பயணிகள், தங்களின் இந்திய மொபைல்போன் எண்ணையே கூடுதல் கட்டணமின்றித் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு வசதியாக இந்த அதிரடித் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சலுகையால், வெளிநாடுகளில் தங்கியிருக்கும் போது பாதுகாப்பற்ற பொது வைஃபை-ஐ நம்பி இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், வங்கி பரிவர்த்தனைகளுக்கான முக்கியமான OTP மற்றும் பாதுகாப்பு அலர்ட்டுகளை தங்களின் Vi எண்ணிலேயே எவ்விதத் தடங்கலுமின்றி இலவசமாகப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய முயற்சி
சோமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் உருவாக்கிய Temple என்ற புதிய அணிகலன் போன்ற சாதனம் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.
நெற்றியின் பக்கவாட்டில் அணியும் இந்த சாதனம், மூளையுடன் தொடர்புடைய ரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்கும் விதமாக வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய நேர்காணலில், தீபிந்தர் கோயல் தனது நெற்றியின் பக்கவாட்டில் இந்த சிறிய சாதனத்தை அணிந்திருந்தது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. தற்போது இந்த சாதனம் 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் வர்த்தக ரீதியாக அறிமுகமாக உள்ளது.

Gemini AIல் புதிய வசதி
கூகுளின் Gemini AIல் புதிய Call for Me வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், கடை மற்றும் நிறுவனங்களுக்கு Gemini தானாக போன் செய்து, பொருட்களின் விலை, இருப்பு, வேலை நேரம் போன்ற தகவல்களை கேட்டறிய முடியும் என தகவல் வெளியாகி உள்ளது. உணவகத்தில் முன்பதிவு செய்வது அல்லது ஏற்கெனவே உள்ள முன்பதிவை மாற்றுவது போன்ற பணிகளையும் AI மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.
இந்த அம்சம் தற்போது சோதனை அடிப்படையில் முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைக்கு இந்த வசதி அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே ஆங்கில மொழியில் வழங்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Link
களமிறங்கக் காத்திருக்கும் Exobot மின்வாகனம்

களமிறங்கக் காத்திருக்கும் Exobot மின்வாகனம்

           


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

1,000 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு

41
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved