Also Watch
Read this

கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியா, தற்போது மின்சார வாகனத் துறையிலும் கால் பதித்துள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால்...
Ceer நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள Exobot எலெக்ட்ரிக் கார்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 2027ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே சவூதி அரேபியாவில் விற்பனைக்கு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கார், ஒரு முறை சார்ஜ் செய்தால் 670 கி.மீ. பயணம் செய்யமுடியும் எனக் கூறப்படுகிறது.

2027ல் சவூதியில் விற்பனை தொடங்கப்பட்ட பிறகு, 2028 முதல், பிற மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இந்த விற்பனை விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சவூதி அரேபியாவின் 'விஷன் 2030' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பிராண்ட் உருவாக்கப்பட்டு உள்ளது.

கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்
அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை அக்டோபர் 8ஆம் தேதி தொடங்குகிறது. ஐபோன் 16, சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உள்ளிட்ட பிரீமியம் ஸ்மார்ட் போன்களுக்கு, மிகப்பெரிய வருடாந்திர சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட உள்ளது.
சந்தையில் புதியதாக அறிமுகமான iPhone 16 சீரிஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உள்ளிட்ட பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகை அறிவிக்கப்பட உள்ளது.
மொபைல்போன் தவிர லேப்டாப், ஸ்மார்ட் டிவி, வீட்டு உபயோகப் பொருட்கள், ஃபேஷன் மற்றும் அழகு சாதனப் பொருட்களுக்கும் இந்த ஆண்டின் மிகக் குறைந்த விலையில் சலுகைகள் கிடைக்கும் என அமேசான் கூறி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved