Also Watch
Read this
2026-27ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், அதிக அந்நிய முதலீடுகளை ஈர்த்த இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

சுமார் 50,000 கோடி
இந்த 3 மாதங்களில் தமிழ்நாடு, சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான நேரடி அந்நிய முதலீட்டை ஈர்த்திருப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2025-26 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் தமிழ்நாடு ஈர்த்த நேரடி அந்நிய முதலீடு 25 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது அது இரு மடங்காக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு முதலிடம்
2026-27ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், இந்திய மாநிலங்களில் அதிக அந்நிய முதலீட்டை ஈர்த்த மாநிலமாக, தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்த மூன்று மாதங்களில் தமிழ்நாடு 5.95 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது சுமார் 50 ஆயிரம் கோடி அளவிலான அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது. கடந்த 2025-26ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் தமிழ்நாடு ஈர்த்த அன்னிய நேரடி முதலீடு 2.7 பில்லியன் டாலராக இருந்த நிலையில், தற்போது அது இரு மடங்குக்கும் மேலாக உயர்ந்து உள்ளது.

தமிழ்நாட்டிற்கு அடுத்து...
மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக,

மகாராஷ்டிரா 4.22 பில்லியன் டாலர்
டெல்லி 2.67 பில்லியன் டாலர்
கர்நாடகா 2.11 பில்லியன் டாலர்
குஜராத் 1.30 பில்லியன் டாலர் அந்நிய முதலீடு ஈர்த்துள்ளன.

இந்திய அளவில்...
ஏப்ரல் – ஜூன் காலாண்டில் மொத்த 19.81 பில்லியன் டாலராக, இந்திய அளவில் இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 6 சதவீதம் அதிகம். அந்நிய முதலீடு, மறுமுதலீடு செய்யப்பட்ட வருவாய் மற்றும் பிற கேப்பிடல் ஆகியவற்றை சேர்த்த மொத்த அந்நிய முதலீடு 30.65 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

முக்கிய பங்கு
தமிழ்நாட்டின் முதலீட்டு உயர்வுக்கு உற்பத்தித் துறை முதலீடுகள், உலகளாவிய திறன் மையம் மற்றும் சேவைத்துறை முதலீடுகள் முக்கிய காரணிகளாக குறிப்பிடப்படுகின்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved