news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

மிக இளம் வயதில் தங்கம் வென்று சாதனை

குரிஹாரா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆசிய போட்டி

ஜப்பானை சேர்ந்த 11 வயது சிறுவன் குரிஹாரா

ஆசிய போட்டிகள் வரலாற்றில் மிக இளம் வயதில் தங்கம் வென்ற பெருமையை ஜப்பானை சேர்ந்த 11 வயது சிறுவன் பெற்றுள்ளான். ஜப்பானை சேர்ந்த 11 வயது சிறுவன் குரிஹாரா, புயோ - புயோ சாம்பியன்ஸ் இறுதிப்போட்டியில் தென் கொரியாவின் 24 வயதான காங் டோங்ஷினை 10-க்கு 2 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றான்.

வென்றதில் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், தங்கப் பதக்கம் பார்க்க மிகவும் அழகாகவும் பளபளப்பாகவும் உள்ளதாகவும் வெகுளியாக கூறியுள்ளான்.

ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டியில் இந்தியா அசத்தல்

ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டியில் இந்திய அணி 4 போட்டிகளிலும் வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்துடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நேற்று நடைபெற்ற கடைசி லீக் சுற்றில் இந்திய அணி ஜப்பானை 2-க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இந்தியாவின் அபிஷேக் 15-வது நிமிடத்திலும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் 40-வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர். அரையிறுதியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதுகிறது.

ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம்

ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை வெண்கல பதக்கம் வென்றார். இந்தியா சார்பில் பிராச்சி சவுத்ரி, கிரண் பாஹல் ஆகியோர் கலந்து கொண்டதில், பிராச்சி சவுத்ரி 53.21 விநாடிகளில் ஓடி வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியா இதுவரை 4 தங்கம், 12 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 30 பதக்கங்களை பெற்றுள்ளது.

Related Link
செஸ் ஒலிம்பியாட் 10-வது சுற்றில் இந்திய அணி அபாரம்

செஸ் ஒலிம்பியாட் 10-வது சுற்றில் இந்திய அணி அபாரம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஞானேஷ் குமாருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved