Also Watch
Read this

சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் 2 ஆயிரத்து 680 ரூபாய் குறைந்தது. காலை, மாலை என ஒரே நாளில் இருமுறை விலையில் சரிவு ஏற்பட்டது. ஆபரண தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 2,680 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம், 100 ரூபாய் குறைந்து, 13 ஆயிரத்து 665 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

செப்டம்பர் 25
ஒரு சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,080 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 10 ரூபாய் விலை அதிகரித்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 14,010 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 50,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 26
சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம், ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் 14,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், கிலோ இரண்டரை லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 28 காலை
ஒரு சவரனுக்கு 1,880 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 235 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,765 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 28 பிற்பகல்
ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் 2 ஆயிரத்து 680 ரூபாய் குறைந்தது. காலை, மாலை என ஒரே நாளில் இருமுறை விலையில் சரிவு ஏற்பட்டது. காலையில் 1,880 ரூபாய் குறைந்த நிலையில், பிற்பகலில் 800 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம், 100 ரூபாய் குறைந்து, 13 ஆயிரத்து 665 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
செப்டம்பர் 25 - ரூ.1,12,080
செப்டம்பர் 26 - ரூ.1,12,000
செப்டம்பர் 27 - ரூ.1,12,000
செப்டம்பர் 28 - ரூ.1,10,120 காலை
செப்டம்பர் 28 - ரூ.1,09,320 பிற்பகல்

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved