news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார் முதலமைச்சர் விஜய்

தங்க குடத்தில் பூரண கும்பம்

50

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார் முதலமைச்சர் விஜய், கோவிலுக்கு வந்தவருக்கு தங்க குடத்தில் பூரண கும்பம் வைத்து மரியாதை அளித்து வரவேற்பு தரப்பட்டது.

கோயில் முன் பெருங்கூட்டம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன் முதலமைச்சரை வரவேற்க பெருங்கூட்டம் திரண்டு இருந்தது. பொதுமக்கள் திரண்டிருப்பதை கண்டதும் நடந்து சென்று கையை அசைத்து, முதல்வர் விஜய் வாழ்த்துக்களை ஏற்றார்.

தனித்து தரிசனம் கண்ட முதலமைச்சர்
குடமுழுக்கு முடிந்த 12ஆவது நாளில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரை முதலமைச்சர் விஜய் தரிசனம் செய்தார். முதலமைச்சர் தரிசனத்தை ஒட்டி பக்தர்களுக்கு அனுமதி தரப்படவில்லை.

உற்சாக வரவேற்பு
மதுரை மீனாட்சி கோவிலுக்கு புறப்பட்ட முதலமைச்சர் விஜய்க்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வாகனத்தில் மக்களை நோக்கி கையசைத்தப்படி முதலமைச்சர் விஜய் பயணம் மேற்கொண்டார்.

அன்பு பரிசு
மதுரை மீனாட்சி அம்மனை, மக்களின் வரவேற்பை ஏற்றபடியே தரிசிக்க சென்றார் முதலமைச்சர் விஜய். வழியில் முதலமைச்சர் சென்ற வேனை நிறுத்தி அஜித் உடன், அவர் இருக்கும் புகைப்படத்தை தொண்டர்கள் பரிசளித்தனர்.

பூரண கும்ப மரியாதை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது, கோவில் முன் திரண்டிருந்த பொதுமக்கள் முதலமைச்சரை வாழ்த்தி முழக்கம் எழுப்பினர்.

மீனாட்சி தரிசனம்
மதுரையில் மீனாட்சி அம்மன் மற்றும் சொக்கநாதரை தரிசித்தார் முதலமைச்சர் விஜய். முன்னதாக கோவிலில் முதலமைச்சர் விஜய்க்கு பட்டு சால்வை வழங்கி அறங்காவலர் குழு தலைவரான ருக்மணி பழனிவேல் ராஜன் வரவேற்றார். அப்போது, ருக்மணி அம்மாளின் காலில் விழுந்து, முதல்வர் விஜய் ஆசி பெற்றார்.

நம் தமிழ்நாடிது
மதுரையில் மீனாட்சியம்மன் படத்துடன் முதல்வர் விஜயைக் காண காத்திருந்த இஸ்லாமிய சிறுமி அனைவரது கவனத்தை ஈர்த்தார்.

Related Link
சரித்திரம் படைத்த தமிழகத்தின்

சரித்திரம் படைத்த தமிழகத்தின் "தாய்மாமன்"


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

செஸ் ஒலிம்பியாட்டில் தமிழ்நாடு வீரர்கள் சாதனை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved