news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

"ஆதாரம் இன்றி வழக்கு போட முடியாது" - கவின் வழக்கில் மிகப்பெரிய திருப்பம்

SI தம்பதி விடுதலை? கோர்ட்டில் நடந்தது என்ன?

40

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாட்டையே உலுக்கிய கவின் ஆணவக்கொ* வழக்கின் மேல்முறையீட்டு மனுவில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வழங்கியிருக்கும் தீர்ப்பு, காவல் துறையின் புலனாய்வு போக்கையே சுக்குநூறாக உடைத்தெறிந்துள்ளது. 

கொடூர சம்பவம்
கடந்த 2025 ஜூலை மாதம், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில், சுர்ஜித் என்கிற இளைஞரால் சாப்ட்வேர் இன்ஜினியரான கவின் கொடூரமான முறையில் கொ* செய்யப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சுர்ஜித்தின் சகோதரியை கவின் காதலித்து வந்ததாகவும், சாதி கடந்த காதல் பிடிக்காத காரணத்தினாலேயே சுர்ஜித் ஆத்திரமடைந்து இந்த கொடூர சம்பவத்தை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

காவல் சார்பு ஆய்வாளர்கள்
முதலில், நெல்லை காவல்துறை விசாரித்த இந்த வழக்கில், சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்து விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் மிக முக்கிய முடிச்சே, குற்றவாளி சுர்ஜித்தின் பெற்றோரான சரவணன், கிருஷ்ணகுமாரி இருவரும், மணிமுத்தாறு பட்டாலியனில் காவல் சார்பு ஆய்வாளர்களாக பணியாற்றி வந்தவர்கள். மகன் அரங்கேற்றிய கொ*யில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழ, குற்றப்பத்திரிகையில் சுர்ஜித்தின் எஸ்.ஐ. பெற்றோர் சரவணன், கிருஷ்ணகுமாரி மற்றும் நெருங்கிய உறவினர் ஜெயபால் ஆகிய 3 பேரும் சந்தேக நபர்களாக சேர்க்கப்பட்டு நெல்லை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

ரத்து செய்ய வேண்டும்
இந்த சூழலில்தான், ’தங்கள் மீது வேண்டுமென்றே பொய் வழக்கு போட்டுள்ளனர், சிபிசிஐடி குற்றப்பத்திரிகையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்,’ என கோரி சரவணன், கிருஷ்ணகுமாரி மற்றும் ஜெயபால் ஆகிய மூவரும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, 2016-2017 மற்றும் 2018-2019 காலகட்டங்களிலேயே கவினின் தாயாரை நேரில் அழைத்து சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரி கடுமையாக எச்சரித்ததாகவும், அதுமட்டுமல்லாமல், கொ* நடந்த பிறகு, பெற்றோர் இருவரும் தங்கள் மகனை சந்தித்து கவினின் உடை, செல்போன், காரின் போலி நம்பர் பிளேட்டை அப்புறப்படுத்த வழிகாட்டியதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

உறுதியான சான்று இல்லை
ஆனால், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ’காவல்துறையின் இறுதி அறிக்கையில் சொல்லப்பட்டவை அனைத்துமே வெறும் ஊகங்களும் கற்பனைகளுமே தவிர, அதற்கு எவ்வித உறுதியான சான்றுகளும் இல்லை,’ எனவும், ஒரே செல்போன் டவர் பகுதியில் மூவரின் போன்களும் இருந்தன என்பதை மட்டுமே வைத்து அவர்கள் நேரில் சந்தித்து சதித்திட்டம் தீட்டினார்கள் என முடிவுக்கு வர முடியாது என வாதிட்டார்.

வெறும் அனுமானமே...
இருதரப்பு வாதங்களையும் அலசி ஆராய்ந்த நீதிபதி ஆர்.விஜயகுமார், சிபிசிஐடியின் புலனாய்வையே சுக்குநூறாக உடைத்தெறியும் வகையில் அதிரடி உத்தரவை பிறப்பித்தார். கொ*க்குப்பின் பெற்றோர் மகனை சந்தித்து ஆதாரங்களை அழிக்க சொன்னதாக கூறியதற்கு எவ்வித நேரடி சான்றோ, சாட்சியங்களோ இல்லை எனவும், ஒரே செல்போன் டவர் லொகேஷனில் இருந்தார்கள் என்பதற்காகவே இருவரும் நேரில் ஒன்றாக தான் இருந்தார்கள் என சட்டப்படி கூற முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த செல்போன் பேச்சுக்களை வைத்து இந்த கொ* வழக்கோடு முடிச்சு போடப் பார்த்தது புலனாய்வு அமைப்பின் வெறும் அனுமானமே என குறிப்பிட்ட நீதிபதி, குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதற்காக மட்டுமே ஒருவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தை அள்ளி வீசிவிட முடியாது என்றும் தெரிவித்தார்.


குற்றப்பத்திரிகை ரத்து
இதையெல்லாம் சுட்டிக்காட்டி, எஸ்.ஐ. தம்பதியான சரவணன், கிருஷ்ணகுமாரி மீதான குற்றப் பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி. அதேநேரம், விசாரணையின்போது மனுதாரர்களின் பங்கு குறித்து புதிய ஆதாரங்கள் கிடைத்தால், விசாரணை நீதிமன்றம் தன் அதிகாரத்தை பயன்படுத்தி விசாரணையை தொடரலாம் என்றும் தெளிவுபடுத்தினார்.

ஜெயபால் மனு தள்ளுபடி
3ஆவது மனுதாரரான உறவினர் ஜெயபாலை பொறுத்தவரை, கவினை ஏற்கனவே நேரில் சந்தித்து, காதலை கைவிடாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியதோடு, சம்பவம் நடந்த அன்று கவினிடம் 24 நிமிடங்களுக்கு மேல் போனில் பேசியுள்ளார்.

மேலும், அவருக்கு சொந்தமான குவாரியில்தான் சுர்ஜித்தின் ரத்த கறை படிந்த ஆடைகள் எரிக்கப்பட்டு, காரின் நம்பர் பிளேட் மற்றும் செல்போன் நொறுக்கி எறியப்பட்டு கைப்பற்றப்பட்டு உள்ளன. இப்படி ஸ்ட்ராங்கான ஆதாரங்கள் உள்ளதால், ஜெயபாலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உயர் நீதிமன்ற மதுரை அமர்வு.

Related Link
சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் கதறி அழுத சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரி

சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் கதறி அழுத சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈராக்கிலிருந்து வெளியேறிய அமெரிக்கா, சதாம் உசேனை வீழ்த்தியது சாதனையா?

28
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved