news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

ஹோர்முஸ் நீரிணையில் 3 வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்

மிகுந்த எச்சரிக்கை

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஹோர்முஸ் நீரிணை

ஒரே நாளில் கச்சா எண்ணெய், எரிவாயு கப்பல்கள் மீது தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணையில் ஒரே நாளில் கச்சா எண்ணெய் மற்றும் LNG டேங்கர்கள் உட்பட மூன்று வணிகக் கப்பல்கள் மீது மர்ம எறிகணைகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இப்பகுதியில் பயணிக்கும் அனைத்து வணிகக் கப்பல்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறும், சந்தேகத்திற்கிடமான நகர்வுகள் ஏதேனும் இருந்தால் உடனடியாகத் தெரிவிக்குமாறும் பிரிட்டனின் கடல்சார் வணிக கண்காணிப்பு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்களில் 5 பேர் பலி

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 5 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 19 பேர் காயமடைந்தனர். டெல் அல் ஹவா பகுதியில் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேரும், காசா நகரில் நடந்த மற்றொரு தாக்குதலில் ஒரு பெண்ணும் உயிரிழந்தனர்.

மேலும், இந்த தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலரும் காயமடைந்துள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான போதிலும், காசாவில் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருவதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் அமெரிக்க விமானப்படை தளம் அருகே நாசவேலை

இங்கிலாந்தில் உள்ள அமெரிக்காவின் விமானப்படைத் தளம் அருகே நள்ளிரவில் 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் ஈரானுக்கு பங்கு உள்ளதற்கான வலுவான அறிகுறிகள் இருப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார்.

மேலும், விமானப்படைத் தளத்தின் எல்லைப் பகுதிக்கு அருகே 5 பேரும் 3 வேன்களும் எப்படி வந்தன என்பது குறித்து, பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

Related Link
அமெரிக்க கடற்படையின் புதிய போர் விமான ஒப்பந்தம்

அமெரிக்க கடற்படையின் புதிய போர் விமான ஒப்பந்தம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சூரியின் நடிப்பில் வெளியாகியுள்ள மண்டாடி திரைப்படம்

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved