news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

ஓமானிய துணை விமானி ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒப்படைப்பு

சவுதி அரேபியா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிளைதுபாய்

ஃபிளைதுபாய் விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்ற விமானி

துபாய் - டெல் அவிவ் இடையிலான ஃபிளைதுபாய் விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்றதாகவும், விமான கேப்டனை தாக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்ட ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானியை, சவுதி அரேபியா ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒப்படைத்தது.

சவுதியின் தபூக் நகரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட விவகாரத்தில், சவுதி அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணை நிறைவடைந்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்து மதக் குழு வருகையின் போது பெண் ஊழியர்கள் அகற்றம்

ஈபிள் கோபுரத்திற்கு BAPS இந்து மதக் குழு சென்ற போது பெண் ஊழியர்கள் விலக்கி வைக்கப்பட்டது உண்மை தான் என விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

பாரிஸ் நகர பொது ஆய்வகம் மேற்கொண்ட விசாரணையில், தகவல் பரிமாற்ற தவறுகள் மற்றும் நிர்வாக குளறுபடிகள் காரணமாகவே பெண் ஊழியர்கள் அகற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஈபிள் கோபுரத்தை நிர்வகிக்கும் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் பதவி விலகப் போவதாக அறிவித்த நிலையில், இந்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

மதீனாவின் தைபா மின் விநியோக நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்

சவுதி அரேபியாவின் மதீனாவில் தைபா மின் விநியோக நிலையத்தின் மீது ஏமன் நாட்டின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக சவூதி தலைமையிலான கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த 29ஆம் தேதி நடந்த தாக்குதலில் ஒரு மின்மாற்றி சேதம் அடைந்ததாகவும், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களை வம்புக்கு இழுக்கும் வகையில் ஹூதிகள் புனித நகரங்களை இலக்கு வைப்பதாகவும் சவூதி கூட்டணி குற்றம்சாட்டியுள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஹூதி அமைப்பு, இதற்கு முன்பு மக்கா நகரை தாக்கியதாக கூறி அதற்கு ஆதாரம் காட்ட முடியாத தோல்வியை மூடிமறைக்கவே வீண் பழியைச் சுமத்துவதாக தெரிவித்துள்ளது.

Related Link
உக்ரைன் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தும் மோடி

உக்ரைன் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தும் மோடி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved