Also Watch
Read this
By: Manigandan Raja

SIR பணிகளில் சதி நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டு
கர்நாடகத்தில் SIR பணிகளில் சதி நடந்துள்ளதாக கூறி பெங்களூருவில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் முதலமைச்சர் சிவகுமார் அமைச்சர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தேர்தல் ஆணையப் படிவம் 7 விண்ணப்பங்கள் மூலம், வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமான பெயர்களை நீக்க முயற்சி நடந்திருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
கடலில் மூழ்கி 8 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு
மஹாராஷ்ராவில் கடலில் மூழ்கி 8 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புனே மாவட்டம் ஆளந்தி பகுதியை சேர்ந்த தனியார் பயிற்சி மையத்தில் படிக்கும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், ராய்காட் மாவட்டத்தில் உள்ள திவேகர் கடற்கரைக்கு சுற்றுலா சென்றனர்.

கடற்கரையில் இறங்கி குளித்தபோது, 8 மாணவர்கள் அலையில் அடித்து செல்லப்பட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved