Also Watch
Read this
By: Manigandan Raja

இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு
நடுவானில் பயங்கரவாத தாக்குதலில் இருந்து விமானத்தை காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.
தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்த அவர், அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தீபம் ஏற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், பிரதமர் மோடிக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
6 பேருடன் நடுவானில் திடீரென மாயமான சிறியரக விமானம்
பெர்முடாவில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்ட சிறியரக விமானம் திடீரென மாயமான நிலையில், தேடும் பணியை அமெரிக்கா முடுக்கி விட்டுள்ளது. பெர்முடா சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணம் பாஸ்டன் நகருக்கு கல்ப்ஸ்டிரீம் ஜி 100 என்ற சிறிய ரக விமானம் 6 பேருடன் புறப்பட்டது.

நன்டக்கெட் தீவு அருகே நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து விமானம் மாயமானது.
தங்கச் சுரங்கம் இடிந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். தகார் மாகாணம் சாக் அப் மாவட்டம் ஷா மஸ்டான் பள்ளத்தாக்கு பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கத்தில் 5 பேர் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, திடீரென தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேரும் உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற மீட்புக்குழுவினர் 5 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved