Also Watch
Read this
By: Manigandan Raja

இந்தியாவை 4-0 என வீழ்த்தி பிரேசில் அணி அபார வெற்றி
சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் பிரேசில் அணி 4-க்கு 0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் ஸ்டேடியத்தில் இரு அணிகளுக்கும் இடையே முதல்முறையாக நடைபெற்ற சர்வதேச போட்டியில், இந்திய அணி போராடியபோதிலும், உலகின் முன்னணி கால்பந்து அணிகளில் ஒன்றான பிரேசில் தனது அனுபவத்தையும் ஆட்டத்திறனையும் வெளிப்படுத்தி வெற்றியை பதிவு செய்தது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய அணி 0-க்கு 2 என பின்தங்கியது. இறுதியில், பிரேசில் அணி 4-க்கு 0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.
சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் மெத்வதேவ், ஜோகோவிச் அபாரம்
சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் ரஷ்யாவின் டேனில் மேத்வதேவ், செர்பியாவின் ஜோகோவிச் ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர். தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் மெத்வதேவ் 6-க்கு 4, 6-க்கு 3 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஜேன் லென்னர்ட்டை வீழ்த்தினார்.

மற்றொரு போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச் 4-க்கு 6, 7-க்கு 6, 6-க்கு 2 என்ற செட் கணக்கில் சீனாவின் யுன்சாவ்கேட்டை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் கோலி கோல்டன் டக்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டியில், நட்சத்திர வீரர் விராட் கோலி முதல் பந்திலேயே ஆட்டமிழந்ததன் மூலம் 7 ஆண்டுகளுக்கு பிறகு கோல்டன் டக் ஆனார். ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி முதல் பந்திலேயே ஆட்டமிழப்பது இது 4-வது முறையாகும்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved