news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

இந்தியாவின் போர் நிறுத்த முன்மொழிவை பரிசீலிக்க தயார்

போர் நிறுத்த முன்மொழிவு

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
உக்ரைன் வெளியுறவு அமைச்சர்

உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா சம்மதம்

இந்தியாவின் போர் நிறுத்த முன்மொழிவை பரிசீலிக்க தயாராக உள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா, தங்களிடம் 4 போர் நிறுத்த முன்மொழிவுகள் இருப்பதாகவும், சாத்தியமான போர் நிறுத்த முன்மொழிவுகள் இந்தியா, துருக்கி, எகிப்து, அமெரிக்காவிடம் இருந்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இவற்றில் இந்தியாவின் முன்மொழிவுதான் மிகவும் விரிவானது மற்றும் அதிக விஷயங்களை உள்ளடக்கியது என தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

வடகொரியா AI தொழில்நுட்பத்துடன் கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி சோதனை நடத்தியுள்ளது. வடகொரியாவின் துறைமுக நகரமான வின்சன் நகரில் இருந்து 4 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது.

இந்த ஏவுகணைகள் கொரிய தீபகற்பத்தில் 700 கிலோ மீட்டர் தூரம் சென்று தென் கொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் விழுந்தன. இந்த ஏவுகணை சோதனையை தொடர்ந்து தென் கொரியா தேசிய பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியது.

Related Link
இந்திய விமானிக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அழைப்பு

இந்திய விமானிக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அழைப்பு

                   

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா வரலாற்று சாதனை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved