வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரசிகர்களை சந்தித்த ஹிப் ஹாப் தமிழா ஆதி, கானா கலை தொடர்ந்து வளர வேண்டும் என்றும், எல்லா கலைகளும் ஒன்றுதான் என்பதை உணர்த்துவதே தனது படத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.
வாழ்க்கையில் எந்தவித பின்னணியும் சமரசமும் இன்றி முன்னேற வேண்டும் என்றால் அதற்கு படிப்பு மட்டுமே வழி எனக் கூறினார்.
ரசிகர்களின் கைதட்டலே உண்மையான ஊதியம்
கோவை அவிநாசி சாலையில் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தை ரசிகர்களுடன் இணைந்து பார்த்த நடிகர் அசோக் செல்வன், ரசிகர்களின் கைதட்டலும் விசிலும் தான் படக்குழுவினரின் உழைப்புக்கான உண்மையான ஊதியம் என தெரிவித்தார்.
காதல், ஆக் ஷன், த்ரில்லர் என மூன்று ஜானர்களில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆபத்தான சண்டைக்காட்சியை தானே செய்ததாக கூறினார்.