இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜம்மு-காஷ்மீர் அணியை 167 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ரெஸ்ட் ஆப் இந்தியா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஸ்ரீநகரில் நடைபெற்ற போட்டியில் ரிஷாப் பன்ட் தலைமையிலான ரெஸ்ட் ஆப் இந்தியா அணி, முதல் இன்னிங்சில் 237 ரன்களும், 2-வது இன்னிங்கில் 319 ரன்களும் எடுத்தது. ஜம்மு காஷ்மீர் முதல் இன்னிங்சில் 278 ரன்களும், 2-வது இன்னிங்சில் 111 ரன்களும் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அபாரம்
நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி 7-க்கு 0 என்ற கோல் கணக்கில் குரேஷியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஹாரி கேன், புகாயோ சகா ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்து அசத்தினார்கள்.
ஜூட் பெல்லிங்கம், ஆண்டனி கோர்டான், மோர்கன் ரோகெர்ஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 16 ஷாட்டுகளில் 9 முறை இலக்கை நோக்கி அடித்தது. மாறாக, குரேஷியா 10 ஷாட்டுகளில் ஒருமுறை மட்டுமே இலக்கை நோக்கி அடித்தது.
ஆஸ்திரேலியா "ஏ" அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்
ஆஸ்திரேலியா "ஏ" அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் பாண்டியாவுக்கு பதிலாக சூர்யான்ஷ் ஷெட்கே இணைந்துள்ளார். நாளை ((அக்டோபர் 6)) போட்டி தொடங்கும் நிலையில், ஹர்திக் பாண்டியாவுக்கு வலது காலின் கீழ்ப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆஸ்திரேலியா ஏ அணி மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர் உட்பட குறைந்தது 3 வாரத்துக்கு அவரால் கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.