ஜெர்மனி, அர்ஜென்டினா வீரர்களை வீழ்த்தி அபார வெற்றி
சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷியாவின் டேனில் மெத்வதேவ் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர். தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவை 4-க்கு 6, 6-க்கு 4, 6-க்கு 4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வென்றார்.
மற்றொரு போட்டியில், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோவை எதிர்கொண்ட மெத்வதேவ் 7-க்கு 6, 6-க்கு 3 என்ற செட் கணக்கில் வென்றார்.
சீனா ஓபன் டென்னிஸ் தொடர்: ஆண்ட்ரீவா, ஒசாகா அபாரம்
சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் மிர்ரா ஆண்ட்ரீவா, நவோமி ஒசாகா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசின் சாரா பெஜ்லெக்கை 7-க்கு 6, 6-க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் நவோமி ஒசாகா வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானின் பொலினா குடர்மெடோவாவை எதிர்கொண்ட ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, 6-க்கு 4, 6-க்கு 1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.