news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

இந்திய மகளிர் அணியின் புதிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா

ஹர்மன்பிரீத் கௌர்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஸ்மிருதி மந்தனா

ஹர்மன்பிரீத் கௌர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்

  • இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டனாக இருந்த ஹர்மன்பிரீத் கௌர், அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
  • இதையடுத்து, புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவை நியமித்த பிசிசிஐ, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணியையும் அறிவித்துள்ளது. டி20 தொடர் வரும் 16ம் தேதியும், ஒருநாள் தொடர் 23ம் தேதியும் தொடங்குகிறது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர்

  • நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் இடம்பெற்றுள்ளார். இவர் கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடியிருந்தார்.
  • இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வரும் 22-ம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி

  • மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. லக்னோவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.1 ஓவரில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
  • ஷாய் ஹோப் 52 ரன்களும், ஷெர்பேன் ரூதர்போர்டு 56 ரன்களும் விளாசினர். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 2 விக்கெட் இழப்புக்கு 14.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றிபெற்றது. கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் வெறும் 42 பந்துகளில் 6 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் சதமடித்து அசத்தினார்.


Related Link
விடைபெற்றார் லியோனல் மெஸ்ஸி

விடைபெற்றார் லியோனல் மெஸ்ஸி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தல் கண்காணிப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved