news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home trade
tv

Also Watch

உயரப் போகும் வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி!

ரிசர்வ் வங்கி

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வட்டியை கூட்டிய RBI

  • நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி. இந்த உயர்வால், வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்திருக்கும் நிலையில், அதிகரிக்கப்பட்ட ரெப்போ வட்டி என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

கடைசியாக 2023 பிப்ரவரியில் இந்த வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருந்தது

  • வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதமே ரெப்போ வட்டி விகிதம் என அழைக்கப்படுகிறது. சர்வதேச அளவிலான சூழலைப் பொறுத்தும், நாட்டில் நிலவும் பணவீக்கத்தைப் பொறுத்தும் 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் நிதிக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ ரேட் பற்றி விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில், கடைசியாக 2023 பிப்ரவரியில் இந்த வட்டி விகிதம் 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டிருந்தது.
  • அதற்கு பிறகான காலங்களில் 6.25 சதவீதம், 6 சதவீதம் என்று தொடர்ந்து குறைக்கப்பட்ட நிலையில், கடைசியாக 5.25 சதவீதத்தில் இருந்தது. இந்த நிலையில்தான் புள்ளி 25 சதவீதம் வட்டி விகிதத்தை உயர்த்தியிருக்கிறது ரிசர்வ் வங்கி.
  • ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி உயர்வைத் தொடர்ந்து, வங்கிகளும் தாங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துகின்றன. இதனால், வங்கியில் பெறப்பட்ட வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

பாதிப்பு இருக்கும் என்றும் சொல்கிறார்கள்


வங்கிகளைப் பொறுத்து, அவை வழங்கிய கடன்களைப் பொறுத்து இந்த வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். கூடவே கடனாளிகளுக்கு இரண்டு வகைகளில் இதன் பாதிப்பு இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

மாதத்தவணையில் மாற்றம் அல்லது அசலை திருப்பி செலுத்தும் காலம் நீட்டிப்பு என்ற அளவில் இந்த வட்டி விகித உயர்வு எதிரொலிக்கும் என்பதால், வட்டி விகித உயர்வு பேசுபொருளாகியுள்ளது.
வழக்கமாக ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படும்போது, வங்கிகளில் கடன் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட வங்கிகளை அணுகும் போதுதான், பெற்றிருக்கும் கடனில் ஏதும் தாக்கம் ஏற்படுமா? எந்த வகையில் அதனை சமாளிக்கலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

விலைவாசி உயர்வு அதிகரிக்கும்போது, அதனை கட்டுக்குள் கொண்டு வரவே ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது. இப்படி, கடனின் வட்டி விகிதத்தை உயர்த்தி, அதன் மூலம் கடன் வாங்குவதை குறைப்பது, செலவுகளை குறைப்பது என்ற நோக்கிலேயே ரிசர்வ் வங்கி நடவடிக்கையை மேற்கொள்கிறது.
பொதுவாகவே, நாட்டில் தாங்கள் எதிர்பார்க்கும் விலைவாசி உயர்வு 4 அல்லது 5 சதவீதம் குறையும்போது, ரிசர்வ் வங்கியும் ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும்.

Fixed deposit-ன் வட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்


  • மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதம் உயர்வை கண்டிருப்பதால், கடன் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட வங்கிகளை நேரடியாக அணுகி விசாரிப்பதன் மூலம் குழப்பத்தை தவிர்க்கலாம்.
  • வழக்கமாக ரெப்போ வட்டி உயர்வதும், குறைவதும் Fixed deposit-ன் வட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், புதிதாக Fixed deposit-ல் பணம் போட நினைப்பவர்களும் வங்கிகளுக்குச் சென்று வட்டி விகிதங்களை தெரிந்துகொள்வது நல்லது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.



Related Link
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உயரப் போகும் வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி!

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved