news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

இந்தியா உள்ளிட்ட 15 நாடுகள் கூட்டறிக்கையில் கையெழுத்து

சீர்குலைக்கும் கொள்கை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Pஉபரி பிரச்சினைroject

உலகளாவிய உற்பத்தி உபரி பிரச்சினையை எதிர்கொள்ள திட்டம்

  • உலகளாவிய உற்பத்தி உபரி பிரச்சினையை எதிர்கொள்ள இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 15 நாடுகள் இணைந்து கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. ஜி20 வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முக்கிய கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
  • உலகளாவிய தேவையை விட அதிகமாக உற்பத்தி செய்து சந்தையை சீர்குலைக்கும் கொள்கைகளுக்கு எதிராக இந்நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. ஜி20 அமைப்பில் உள்ள சீனா, ரஷ்யா, பிரேசில், இந்தோனேசியா, சவுதி அரேபியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இந்த கூட்டு அறிக்கையில் கையெழுத்திடவில்லை.

பிரான்ஸில் பள்ளி மாணவர்களின் போராட்டம்

  • பிரான்ஸில் பள்ளி மாணவர்களின் போராட்டத்தின் போது, காவல் துறையினரின் தடியடியில் இருந்து மாணவர்களைக் காக்க மேயர் பாலி பாகாயோகோ(Bally Bagayoko) பாதுகாப்பு அரணாக நின்ற வீடியோ இணையத்தில் பரவியது.
  • பாரிஸில் நடைபெற்ற பேரணியின் போது, காவல்துறையினர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த முன்னேறினர். அப்போது அங்கு வந்த மேயர், காவல்துறையினருக்கு முன்பாகத் தன் கைகளை விரித்து நின்று "நிறுத்துங்கள்!" என்று சத்தமாகக் கூறி மாணவர்களைப் பாதுகாத்தார்.
  • இந்த மோதலின் போது காவல்துறையினர் வீசிய கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் மேயர் பாதிக்கப்பட்டு, பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மசூத் அசார் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு வெகுமதி

  • பயங்கரவாதி மசூத் அசார் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு பாகிஸ்தான் அறிவித்துள்ள வெகுமதி வெறும் கண் துடைப்பு என்றும், பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு நிதி உதவி அளிப்பது உலகம் அறிந்த உண்மை என்றும் ஐ.நா. சபையில் இந்தியா கடுமையாக சாடியுள்ளது.
  • பாகிஸ்தான் அரசுக்கு கண்டிப்பாக மசூத் அசாரின் இருப்பிடம் தெரிந்திருக்கும் என்றும், அமெரிக்காவின் பார்வையில் பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்படுவது போல் காட்டிக்கொள்ளவதாகவும் சாடியுள்ளது.


Related Link
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய 5,285 பேரை இறந்ததாக அறிவிக்க முடிவு

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய 5,285 பேரை இறந்ததாக அறிவிக்க முடிவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved