news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

வீரமணி வழக்கில் அடுத்து கைதாகும் அந்த பிரபலம்?

வீரமணி வழக்கின் லேட்டஸ்ட் அப்டேட்

32

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு தொடர்பா முதல்வரே, சென்னை காவல்துறையோட முக்கிய அதிகாரிகிட்ட நேரடியா பேசுறாராம், வழக்கோட விவரங்களையும் தினமும் கேட்டுத் தெரிஞ்சுக்கறாராம்.

காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கிற முதல்வர் விஜய், ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு விவகாரத்துல நேரடியாவே கண்காணிக்கிறாராம். அந்த வழக்குல விசாரணையோட முன்னேற்றத்தையும், சட்ட ரீதியான அணுகுமுறைகளையும் சென்னை காவல்துறையோட முக்கிய அதிகாரிகிட்ட நேரடியா கேட்டு தெரிஞ்சுக்கிட்டு இன்ஸ்ட்ரெக்சனும் கொடுக்குறாராம்.

இந்த வழக்குல மூணு கோணங்கள்ல இப்ப விசாரணை நடந்துக்கிட்டிருக்கு. வீரமணி மேல போடப்பட்டிருக்கற போக்ஸோ வழக்குகள் மற்றும் வழக்கை முறையா விசாரிக்காம தாமதப்படுத்துன அதிகாரிகள் மீதான விசாரணையும், வீரமணி வழக்குகள்ல சமரசத்துக்காக பணம் கைமாறியதாங்கறதப் பத்தி விசாரிக்க சென்னை மாநகர கூடுதல் ஆணையர் நரேந்திர நாயர் தலைமையிலான சிறப்புக் குழு விசாரணையும் நடந்துக்கிட்டிருக்கு.

இந்த ஒட்டு மொத்த விசாரணையோட முன்னேற்றங்களையும் கிட்டத்தட்ட தினமும் மாநகர காவல்துறையோட முக்கிய அதிகாரிகிட்ட கேட்டு தெரிஞ்சுக்குறாராம் முதல்வர்.

ஆரம்பத்துல வீரமணி வழக்கை வெளியில வர விடாம தடுக்கறதுக்காக சிலருக்கு செட்டில்மெண்ட் ஆகியிருக்காம், இந்த செட்டில்மெண்ட் விவகாரங்களை கையாண்டவர் சென்னையில இருக்கற ஒரு பிரபல ஆடிட்டராம். விரைவுலேயே இவரையும் போலீஸ் கைது செய்யும்ங்கறதுதான் வீரமணி வழக்குல லேட்டஸ்ட் அப்டேட்.

Related Link
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு? முதல்வர் எடுத்த அதிரடி முடிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு? முதல்வர் எடுத்த அதிரடி முடிவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பெண்ணின் ஐபோனை திருடிய திருடன்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved