இன்று 94-வது இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் விமானப்படை வீரர்களுக்குத் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
மேலும், வீரர்களின் அர்ப்பணிப்புக்கு பாராட்டுகளையும், வான்வெளியைப் பாதுகாப்பதில் உயிர்த்தியாகம் செய்த தியாகிகளுக்கும் வீரவணக்கத்தையும் செலுத்தியுள்ளனர்.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைக்கு தடைகள் இருப்பதற்கு ‘ஏகபோக ஆதிக்கம்’ காரணம் என்ற எலான் மஸ்கின் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது. செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகளுக்கான அங்கீகார நடைமுறை நியாயமானதும், பாகுபாடற்றதுமாக உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
மஸ்கின் குற்றச்சாட்டு ‘அடிப்படையற்றது, தவறான புரிதலின் அடிப்படையிலானது’ என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
பாலில் சோப்புத்தூள், யூரியா கலந்து விற்பனை
மகாராஷ்டிராவில் பாலில் சோப்புத்தூள், யூரியா போன்ற இரசாயனங்கள் கலந்து விற்பனை செய்த வலையமைப்பை உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் அதிரடியாக முறியடித்துள்ளது.
பாலின் அளவை அதிகரிக்கவும், கெட்டியாகக் காட்டவும் ஆபத்தான இரசாயனங்களைக் கலந்து இந்த போலிப் பால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனையில் பாலில் இரசாயனங்கள் இருப்பது உறுதியானதை அடுத்து, இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.