பாகிஸ்தானின் ராணுவத் தளபதி ஆசிம் முனீர், அந்நாட்டின் நான்கு மாகாணங்களைச் சிறிய மாகாணங்களாகப் பிரிக்க விரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாகாணங்களின் அரசியல் அதிகாரத்தைக் குறைத்து, ராணுவத்தின் செல்வாக்கை அதிகரிக்க இந்த நடவடிக்கை உதவக்கூடும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
நடைமேடைக்கும் இரயிலுக்கும் நடுவில் தவறி விழுந்த குழந்தை
தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் தாயுடன் ரயிலில் ஏற முயன்ற குழந்தை, நடைமேடைக்கும் ரயிலுக்கும் நடுவில் இருந்த இடைவெளியில் தவறி விழுந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே காவலர் ஒருவர் விரைவாக செயல்பட்டு, குறுகிய இடைவெளியில் விழுந்த குழந்தையை காப்பாற்றினார்.
ரஷ்யாவின் ஏஐ டேட்டா சென்டர் மீது தாக்குதல்
ரஷ்யாவின் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்துக்கு சொந்தமான தகவல் மையத்தின் மீது உக்ரைன் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்யாவின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு நிறுவனமான யாண்டெக்சிற்கு சொந்தமான மையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான சர்வர்களை கொண்ட மையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்யா தகவல் மையம் ஒன்றை உக்ரனை தாக்குவது இதுவே முதல்முறை.