2023 உலகக் கோப்பையை இழந்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா வேதனை தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக 19 ஆண்டுகளாக விளையாடியுள்ள தமக்கு, 2023 உலகக் கோப்பை தோல்வியை போன்று ஒருபோதும் கடினமான அனுபவம் இருந்ததில்லை என தெரிவித்துள்ளார்.
ஏனெனில், கோப்பை தேசத்தின் கனவாக இருந்ததால், அந்த தோல்வியை தன்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என கூறியுள்ளார். அதேசயம், 2024 உலகக் கோப்பை வென்றதை நினைவுகூர்ந்த அவர், ஒவ்வொரு நவம்பர் 19-ம் தேதிக்கும், ஜூன் 29-ம் தேதி உள்ளது என்றார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 390 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டர்பனில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மாட் ரென்ஷா சதம் விளாசினார்.
மிகவும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 397 பந்துகளில் 190 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்துள்ளது.