நெப்போலியன் நடிப்பில் உருவான "அமெரிக்க ஆவி" திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
காமெடி, ஹாரர், த்ரில்லராக தயாராகி உள்ள இந்த திரைப்படத்தை ஜீவன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தனுஷ் நெப்போலியன் மற்றும் குணால் நெப்போலியன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
படத்தை அறிமுக இயக்குநர் தஞ்சை ஜே.பி.ஆர். இயக்கி உள்ளார். முழுக்க முழுக்க அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது.
ஜித்து மாதவன் இயக்கியுள்ள "சீன்" திரைப்படம்
ஜித்து மாதவனின் "சீன்" திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரம் கண் பார்வைக் குறைபாடு தொடர்புடையதா என்ற கேள்விக்கு, வசனகர்த்தா டிராவிட் செல்வம் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்தின் கேள்விக்கு பதிலளித்த அவர், வதந்திகளை நம்பாமல் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும்படி கூறினார். சூர்யாவின் ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படம் நவம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.