நடிகர் மணிகண்டன் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து
"இறுதிப்பக்கம் 2" திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னணி இளம் தமிழ் நடிகர் மணிகண்டன் இந்த போஸ்டரை சமூக வலைதளங்களில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
‘இறுதிபக்கம் VOL.02 – FRESH BLOOD’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், படம் ஒரு புதிய ரத்தம் தோய்ந்த மர்மம் மற்றும் பரபரப்பான திரில்லர் கதை என்பது உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
சிம்புவைக் காண ரசிகர்கள் குவிந்தனர்
சென்னை திருவொற்றியூர் சூரை மீன்பிடித் துறைமுகப் பகுதியில், சிலம்பரசன் நடிக்கும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புக்கு வந்த சிம்புவைக் காண நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர்.
படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த சிம்பு, ரசிகர்களைப் பார்த்து கை அசைத்தபடி காரில் புறப்பட்டுச் சென்றார்.
நடிகர் விஜய் தேவரகொண்டா ஆளுமை உரிமைகளை பாதுகாக்க உத்தரவு
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ஆளுமை பண்புகளை அனுமதியின்றி பயன்படுத்தி வெளியிடப்பட்ட போலி விளம்பரங்கள், டீப்ஃபேக் மற்றும் ஆபாச உள்ளடக்கங்களை 72 மணி நேரத்திற்குள் நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூகுள் மற்றும் முன்னணி இ-காமர்ஸ் தளங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலிருந்தும் போலி உள்ளடக்கங்கள், அங்கீகரிக்கப்படாத தயாரிப்புகளை நீக்குமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.