இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனுக்கு கவுரவம்
ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் இந்தியா பிரிவின் தூதராக இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய மந்தனா, இதை கவுரவமாக கருதுவதாகவும், மன உறுதியுடன் போராடினால், வாழ்வில் சாதிக்கலாம் என்பதை கிரிக்கெட் கற்றுக் கொடுத்ததாகவும், ஒவ்வொரு குழந்தையும் பெரிய கனவு காணவும், அதற்கான வாய்ப்பை பெறவும் தகுதியானவர்கள் என்றார். தெற்கு ஆசியாவுக்கான யுனிசெப் தூதரான சச்சின் டெண்டுல்கர் மந்தனாவை யுனிசெப் குடும்பத்திற்கு வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் கின்வென் ஜெங் சாம்பியன்
சீன ஓபன் டென்னிஸ் தொடரில் அந்நாட்டு வீராங்கனை கின்வென் ஜெங் சாம்பியன் பட்டம் வென்றார். பீஜிங் நகரில் நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா, சீனாவின் கின்வென் ஜெங் ஆகியோர் மோதினர்.
ஒரு மணி நேரம் 42 நிமிடம் நீடித்த இந்த போட்டியில் கின்வென் ஜெங் 7-க்கு 5, 6-க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் சீன ஓபன் டென்னிஸ் தொடர் வரலாற்றில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் சீன வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்தார்.