news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

மின் கொள்முதல் விவகாரம், ஷாக் கொடுத்த தவெக அரசு

அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்

41

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழகத்தில் மின்வெட்டு புகார்கள் அதிகரித்துள்ள நிலையில், வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதாக தவெக அரசு மீது திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மின் தேவையும், காற்றாலை உற்பத்திக் குறைவே கூடுதல் கொள்முதலுக்குக் காரணம் என மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ள நிலையில், மின்சார கொள்முதல் விவகாரத்தில் தமிழக அரசு மீது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் என்ன?

தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை...
மின்சாரத்தை தொட்டால் ஷாக் அடிக்கும் என்பார்கள்; ஆனால் தவெக அரசு பொறுப்பேற்றது முதல் அரசுக்கு அடிக்கடி ஷாக் கொடுக்கும் துறையாக இருந்து வருவது இந்த மின் துறைதான் தான்.

மின் வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க் திருட்டு; தொடர் மின்வெட்டு; பியூஷ் கேரியர் திருட்டு; மின் பற்றாக்குறை; மின் கட்டண கணக்கீட்டில் குளறுபடி என நீளும் பட்டியலில் தற்போது லேட்டஸ்டாக சேர்ந்திருப்பது மின் கொள்முதல் விவகாரம்.

மின் கொள்முதலில்...
தமிழகத்தின் மின் தேவையை சமாளிப்பதற்காக, அரசு குறுகிய காலத்திற்கான மின் கொள்முதல் செய்ததில் அதிக விலை கொடுத்து வாங்கி விட்டதாகவும், இதனால் அரசுக்கு தேவையற்ற செலவீனம் ஏற்பட்டுள்ளதுடன், மின் கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாகவும் போர்க்கொடி உயர்த்தியுள்ளன எதிர்க்கட்சிகள்.

மின் தட்டுப்பாட்டை தவிர்க்க ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், அதிக விலை கொடுத்து வாங்கியது ஏன்? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு
இதுதொடர்பாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, தவெக ஆட்சிக்கு வந்து 5 மாதங்களாகியும் மின்வெட்டைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

வெளிச்சந்தையில் ஒரு யூனிட் 35 ரூபாய்க்கு மின்சாரம் கொள்முதல் செய்வது ஏன்? என்று கேள்வி எழுப்பியவர், மின் உற்பத்தியை அதிகரிக்காமல், அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது மின்வாரியத்தின் செலவையும் கடன் சுமையையும் அதிகரிக்கச் செய்யும் என்று செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய்க்கு வாங்கினால் அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என எச்சரித்துள்ளார் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்.

கைவிட வேண்டும் - இபிஎஸ்
ஒரு யூனிட் மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளதன் மூலம், ஏற்கெனவே கடன் சுமையில் சிக்கியுள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்க தவெக அரசு துடிப்பதாகவும், அந்த ஒப்பந்தத்தை உடனடியாக கைவிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
இதற்கிடையே, மின்கொள்முதல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்துள்ள மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் தமிழகத்தின் மின் தேவை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், அதிக தேவை நிலவும் நேரங்களில் மின்பற்றாக்குறையை சமாளிக்கவே வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததும் மின்பற்றாக்குறைக்கு ஒரு காரணம் எனத் தெரிவித்த அமைச்சர், அக்டோபர் 31ஆம் தேதி வரை மட்டுமே கூடுதல் விலையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாகவும், இதனால் கூடுதலாக 5 கோடி ரூபாய் மட்டுமே அரசுக்கு செலவாகும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

மக்களின் எதிர்பார்ப்பு
மின்வெட்டு புகார்கள், மின்கொள்முதல் விலை மற்றும் மின்வாரியத்தின் செயல்பாடுகள் தொடர்பாக, தவெக அரசு மீது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்துவது ஒருபக்கம் இருந்தாலும், தடையற்ற மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பதே சாமானிய மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Related Link
1500 மெகவாட் மின்சாரம் மட்டுமே கொள்முதல் - அமைச்சர் நிர்மல்குமார்

1500 மெகவாட் மின்சாரம் மட்டுமே கொள்முதல் - அமைச்சர் நிர்மல்குமார்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

10, 12 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு 10ஆம் வகுப்பு : 2027 மே 20-ல் முடிவுகள்

52
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved