news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

10, 12 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு 10ஆம் வகுப்பு : 2027 மே 20-ல் முடிவுகள்

11,12ஆம் வகுப்பு : 2027 மே 7-ல் முடிவுகள்

67

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பத்து மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

10ஆம் வகுப்புக்கு அடுத்த ஆண்டு மார்ச் 17 முதல் ஏப்ரல் 9ஆம் தேதி வரையிலும், 12ஆம் வகுப்புக்கு மார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரையிலும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மே 7ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2027 மே 20ஆம் தேதி வெளியாகிறது.

மாணவர்களின் கவனத்திற்கு...
தமிழகத்தில், அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது.
மார்ச் 3ஆம் தேதி 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு தொடங்குகிறது.

கடந்த ஆண்டு 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் 5ஆம் தேதி 11ம் வகுப்புக்கான பொதுத் தேர்வும், மார்ச் 17ஆம் தேதி 10ம் வகுப்புப் பொதுத் தேர்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்
10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், சென்னை அரசு தேர்வுகள் இயக்கக கூட்ட அரங்கில் இன்று அக்டோபர் 14ஆம் தேதி வெளியிட்டார்.

பிளஸ்-2 பொதுத் தேர்வு அட்டவணை

மார்ச் 3ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை பிளஸ்- 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெறுகிறது.

பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 18ஆம் தேதிவரை பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

11, 12ஆம் பொதுத் தேர்வு முடிவுகள் மே 7ஆம் தேதி வெளியாகிறது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை விவரம்;

11வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை விவரம்

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு அட்டவணை விவரம்;

மார்ச் 17ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதி வரை 10ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நடைபெறுகிறது.

மே 20ஆம் தேதி பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கின்றன.


Related Link
‘அரசுப் பள்ளிகளில் 5 நாட்கள் PeT வகுப்பு’

‘அரசுப் பள்ளிகளில் 5 நாட்கள் PeT வகுப்பு’

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

10, 12 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு 10ஆம் வகுப்பு : 2027 மே 20-ல் முடிவுகள்

66
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved