news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

திமுக செய்தால் மட்டும் ஊழலா? தவெக அரசை விளாசிய எடப்பாடி பழனிசாமி

இடைத்தேர்தல் வெற்றி எப்படி?

30

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திமுக ஆட்சியில், ஒரு யூனிட் மின்சாரம் 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்ததை ஊழல் என விமர்சித்த தவெக, தற்போது ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதா? என்றும்,
தவெக அரசு தமிழகத்தில் செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருப்பதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

ஒரு யூனிட் மின்சாரம்...
இதுதொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது;
தமிழக அரசு ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதாக வரும் தகவல், மிகவும் அதிர்ச்சி தருகிறது. கடந்த திமுக ஆட்சியில், ஒரு யூனிட் மின்சாரம் ரூ.11 முதல் ரூ.20 வரை கொள்முதல் செய்யப்பட்டது. அதில் ஊழல் நடந்ததாகக் குறிப்பிட்டு அந்த மின் கொள்முதலை இந்த அரசு ரத்து செய்தது. இதுதொடர்பாக தவெக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டது.

கடந்த மே 23-26 தேதிகளில் முந்தைய ஆட்சியில் போடப்பட்ட குறுகிய கால கொள்முதல் ஒப்பந்தங்களில் அதிக விலை மற்றும் ஊழல் சந்தேகங்கள் இருப்பதாகக் கூறி, அந்த ஒப்பந்தங்களை தவெக அரசு ரத்து செய்தது.

எந்த மாநிலமும் செய்யவில்லை
எந்தவொரு மாநிலமும் ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யவில்லை. ஆனால், இங்குள்ள தவெக அரசு இதைச் செய்கிறது. 5 நிறுவனங்கள் மூலம், சுமார் 4,400 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

ஏற்கெனவே மின்சாரத் துறை கடனில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. இவர்களின் வெள்ளை அறிக்கையிலேயே ரூ.2.48 லட்சம் கோடி கடன் இருப்பதாக கூறப்பட்டது. இவ்வளவு கடன் இருக்கும்போது, இவ்வளவு அதிக தொகைக்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கு என்ன காரணம்?

கிடைத்தால் போதும் என்ற நிலை
கடந்த அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து கடைப்பிடித்திருந்தால், இந்த நிலை வந்திருக்காது. செயற்கையாக மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, இவர்கள் இவ்வாறு கொள்முதல் செய்கின்றனர். மின்சாரம் கிடைத்தால் போதும் என்ற நிலையை உருவாக்கி இருக்கிறார்கள்.

இவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு, ஒரு மாதத்திலேயே மின்வெட்டு ஏற்பட்டது. அப்போதே, மின்சார கொள்முதலை மேற்கொண்டிருந்தால் குறைந்த விலைக்கு செய்திருக்க முடியும். ஆனால், திட்டமிட்டு 4 மாத காலமாக மின்கொள்முதல் செய்யாமல் இருந்துவிட்டு இப்போது ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாய்க்கு வாங்குவது கடும் கண்டனத்துக்கு உரியது. இது ஒரு வெற்றி மெகா ஊழல் என்றே சொல்லலாம்.

ஆந்திராவில் அக்டோபர் மாதம் மின்கொள்முதல் செய்யப்பட்டது. அவர்கள் ஒரு யூனிட் ரூ.15 முதல் ரூ.20 வரை மட்டுமே கொடுத்து கொள்முதல் செய்திருக்கிறார்கள். ஆனால், இவர்கள் ரூ.35 கொடுத்து வாங்குவது குறித்து மக்களிடம் சந்தேகம் எழுந்துள்ளது.

விலைவாசி கடும் உயர்வு
தமிழகத்தில் விலைவாசி உயர்வு கடுமையாக உள்ளது. ஒரு கிலோ அரிசி 100 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. பருப்பு, எண்ணெய், புளி என உணவுப் பொருட்கள் அனைத்தின் விலையும் உயர்ந்துள்ளன. இதனால், ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த அரசு நிர்வாகத் திறமையற்ற அரசு என்பதற்கு இதுவே உதாரணம்.

இடைத்தேர்தல் வெற்றி எப்படி?

பண பலம், அதிகார பலம் இரண்டையும் வைத்துத் தான் இடைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ளது. 2026 பொதுத் தேர்தலின்போது திமுக கூட்டணியை தவெக தலைவர் ‘கல்லாபெட்டி கூட்டணி’ என விமர்சித்தார்.

இந்த கல்லாபெட்டி கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற கட்சிகள் தான் விசிக, ஐயுஎம்எல், இடதுசாரிகள். இவர்களின் தயவால்தான் தவெக அரசாங்கமே அமைந்தது. விஜய் முதல்வராக இருப்பதற்குக் காரணமே இந்த கல்லாப்பெட்டி கூட்டணிதான்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

Related Link
1500 மெகவாட் மின்சாரம் மட்டுமே கொள்முதல் - அமைச்சர் நிர்மல்குமார்

1500 மெகவாட் மின்சாரம் மட்டுமே கொள்முதல் - அமைச்சர் நிர்மல்குமார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாகிஸ்தான் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved