புலியை நண்பனாக்கி இருப்பேன் என்பது போல் ட்ரம்ப் AI வீடியோ
பிரிட்டன் பூங்காவில் புலி தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை குறிப்பிட்டு AI வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஒரு போதும் இயற்கையை சீண்டாதீர்கள் என எச்சரித்துள்ளார்.
ஒரு வேளை ட்ரம்ப் அந்த இடத்தில் இருந்திருந்தால், ஓடிப்பிடித்து விளையாடி புலியை நண்பனாக்கியிருப்பார் என்பது போல் அந்த AI வீடியோ சித்தரிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்தித் தொடர்பாளரான கேட்டி ஜக்காரியா
வெள்ளை மாளிகையின் புதிய செய்தித் தொடர்பாளரான கேட்டி ஜக்காரியா ((Katie Zacharia)) தனது முதல் செய்தியாளர் சந்திப்பில் அதிபர் டிரம்பை தனது கணவர் என்று உளறி கொட்டிய வீடியோ இணையத்தில் கடும் கேலி கிண்டல் மற்றும் அதிகாரிகளின் விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளது.
முந்தைய செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் ((Karoline Leavitt)) பதவி விலகியதைத் தொடர்ந்து அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளரான கேட்டி ஜக்காரியா அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
(Credits:Times of india)
டெல்டா ஏர் லைன்ஸ் விமானத்தில் அமெரிக்க நடிகை தகராறு
லாஸ் ஏஞ்சலஸிலிருந்து நியூயார்க் சென்ற டெல்டா ஏர் லைன்ஸ் விமானத்தில் பணியாளர்களுடன் தகராறில் ஈடுபட்ட அமெரிக்க நடிகை Selma Blair, விமான பணியாளர் ஒருவரை கடித்ததற்காக கைது செய்யப்பட்டார்.
முன்னதாக விமானத்தில் தகராறில் ஈடுபட்ட போது செல்மாவுக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், விமானம் தரையிறங்கியதும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.