Also Watch
Read this
சென்னை ஏர்போர்ட்டில் நடந்த பிரதமர் - முதல்வர் சந்திப்புல பல முக்கிய தமிழக கோரிக்கைகளை முதல்வர் வெச்சிருக்காராம். தமிழகத்துக்கான முழு நேர கவர்னரா அர்லேக்கர் நியமனத்தோட பின்னணியிலயும் ஏர்போர்ட் சந்திப்பு இருக்காம்.
சென்னைக்கு வந்த பிரதமர் மோடி உடன் பல நிகழ்ச்சிகள்ல கலந்துகிட்ட முதல்வர் விஜய், பிரதமர் கடைசியா பங்கேற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில மட்டும் பங்கெடுத்துக்கலை. பிரதமர் அந்த தனியார் நிகழ்ச்சிக்கு போயிட்டு வர்ற நேரத்துல பிரதமரை சந்திக்குறதுக்கும் வழியனுப்புறதுக்கும் முன்கூட்டியே ஏர்போர்ட்டுக்குப் போயிட்டாரு முதல்வர் விஜய்.

கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் ஏர்போர்ட்ல பிரதமர் மோடிக்காக வெயிட் பண்ண முதல்வர் விஜய், டெல்லி புறப்பட ஏர்போர்ட்டுக்கு வந்த பிரதமரை தனியா சந்திச்சு அரை மணி நேரத்துக்கும் மேல பேசியிருக்காரு.
இந்த சந்திப்பு முழுக்கவே கூட இருந்தவரு தமிழக ஆளுநர் அர்லேக்கர். இந்த சந்திப்புல பக்கத்து மாநிலங்களுடனான நதி நீர்பிரச்னையில தமிழகத்தோட நிலைப்பாடு, அதுல மத்திய அரசோட ஒத்துழைப்பு வேணும்னு கேட்டது, அடுத்து கோதாவரி காவிரி இணைப்புக்கு மத்திய அரசோட பங்கு, தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய எஸ்.எஸ்.ஏ. கல்வி நிதி உள்ளிட்ட நிதித்தேவைகள் பத்தியும் பேசியிருக்காரு.

மத்திய அரசை அரசியல் ரீதியா பகைச்சுக்கிட்டு திமுக சாதிக்காம விட்ட பல திட்டங்களை தான் சாதிச்சுக் காட்ட நினைக்கிறாராம் முதல்வர்.
அதனாலதான் பாஜகவோட கொள்கைகள்ல முரண்பட்டாலும், தமிழக தேவைகளுக்காக மத்திய பாஜக அரசோட இணைஞ்சு செயல்பட தீர்மானிச்சிருக்கற விஜய்யோட அரசியல் வியூகம் மோடிக்கு பிடிச்சிருக்கறதா டெல்லி பாஜக வட்டாரங்கள்ல பேச்சிருக்கு.

ஏர்போர்ட்ல பிரதமர் ஆளுநர் முதல்வர்னு மூணு பேரோட சந்திப்புக்குப் பிறகு எல்லோருமே ரொம்பவே முக மலர்ச்சியோட வெளியில வந்தாங்களாம். ஏற்கெனவே ஆளுநர் அர்லேக்கரோட முதல்வர் இணக்கமா இருக்கற நிலையில, இந்த சந்திப்புக்குப் பிறகுதான் அவரையே தமிழகத்தோட முழு நேர கவர்னரா நியமிக்க டெல்லி முடிவெடுத்ததாவும் சொல்றாங்க.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved