இந்திய மகளிர் அணி புதிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா விளக்கம்
இந்திய மகளிர் அணி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள போதிலும், டி20 வடிவிலான போட்டிகளில் இன்னும் கடினமாக உழைக்க வேண்டியிருப்பதாக புதிய கேப்டன் ஸ்மிருதி மந்தனாதெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், டி20 போட்டிகளில் எந்த மாதிரியான அணுகுமுறையை கடைப்பிடிக்க போகிறது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என்றார்.
ரஞ்சி டிராபி: தமிழ்நாடு - ராஜஸ்தான் அணி போட்டி டிரா
ரஞ்சி டிராபி தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் - தமிழ்நாடு அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிவடைந்தது. ராஜஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 363 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 192 ரன்களும் குவித்தது.
தமிழ்நாடு அணி முதல் இன்னிங்கில் 274 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 2-வது இன்னிங்ஸில் 73 ரன்கள் எடுத்திருந்தபோது, 4-வது நாள் ஆட்டம் நிறைவுபெற்றது.
வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரில் இகா ஸ்வியாடெக் அபாரம்
வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரில் போலந்தின் இகா ஸ்வியாடெக், செக் குடியரசின் கரோலினா முசோவா ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் இகா ஸ்வியாடெக், சக நாட்டு வீராங்கனை மக்டலேனாவை வென்றார். மற்றொரு போட்டியில் செக் குடியரசின் கரோலினா முசோவா அமெரிக்காவின் கேடி மெக்னல்லியை வீழ்த்தினார்.