பிரான்ஸ் நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் பொது சேவைகள் குறைந்து வருவதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. லியோன் நகரில் உள்ள சுற்றுலா அலுவலகத்திற்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் அலுவலகம் முற்றிலும் சேதமடைந்தது.
ரியாத் மீது ஹவுதி படைகள் நடத்தும் வான் தாக்குதல்கள்
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் மீது ஹவுதி படைகள் நடத்தும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள், அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.
அமெரிக்காவின் பேட்ரியாட் மற்றும் தாட் போன்ற அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளுக்காக சவுதி அரேபியா பல பில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளது. இருப்பினும், தாக்குதல்களை முழுமையாகத் தடுக்க முடியாதது ஏன் என்ற விவாதம் எழுந்துள்ளது.
அல்பேனியா பிரதமர் பதவி விலகக் கோரி போராட்டம்
அல்பேனியா நாட்டின் தலைநகர் திரானாவில், பிரதமர் எடி ராமா பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் கல்வித்துறையைப் புறக்கணிப்பதாக எழுந்த புகார்களை முன்வைத்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.