news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

ஸ்பாக்களில் சிறுமியை விற்ற சொந்த சித்தி கைது

சிக்க உள்ள கூடுவாஞ்சேரி முக்கிய புள்ளிகள்?

50

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஆந்திராவை சேர்ந்த 16 வயது சிறுமியை சொந்த சித்தியே கேரளம், பெங்களூரு, சென்னை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல ஸ்பாக்களுக்கு பணத்திற்காக அக்ரிமெண்ட் போட்டு விற்றது அம்பலமாகி உள்ளது.

ஆதார் கார்டில் வயதை 20 என மாற்றி, சிறுமியை தனது பணவெறிக்கு இரையாக்கிய சித்தி, சித்தப்பா, 2 ஸ்பா மேலாளர்கள் என 4 பேர் சிக்கி இருக்கும் நிலையில் மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Related Link
முத்து முத்தாக கண்ணீர் வடித்த மீசை மணி

முத்து முத்தாக கண்ணீர் வடித்த மீசை மணி


தனது அக்கா மகளை காணவில்லை என அடித்துப்பிடித்து சித்தி புகார் அளித்ததற்கு பின்னால் அன்பெல்லாம் ஒன்றுமில்லை, பணத்தை வாங்கி பையை நிறைக்க முடியாது என்ற அச்சம்தான் உள்ளது என்பதே உண்மை.

கேரளம், பெங்களூரு, சென்னை
கேரளம் மாநிலம், கோவளம் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஸ்பாவில் பணியாற்றிக் கொண்டிருந்த இளம்பெண் திடீரென காணாமல் போனார். ஸ்பாவின் மேலாளர் அளித்த தகவலின்பேரில் இளம்பெண்ணின் சித்தி திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பிறகு, புகைப்படம், செல்போன் எண் உள்ளிட்டவற்றின் மூலம் விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு, இளம்பெண் ஆந்திராவில் இருப்பது தெரியவந்தது.

அங்கு விரைந்து சென்று அவரை மீட்டு விசாரித்தபோது தான் அது இளம்பெண்ணே இல்லை, 16 வயது சிறுமி என்பதும் அவருக்கு ஸ்பாக்களில் பலகாலமாக பாலியல் சித்ரவதை அரங்கேறியதும் வெளிச்சத்திற்கு வந்தது.

பெற்றோரை இழந்த சிறுமி
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த ஆந்திராவை சேர்ந்த சிறுமி அதன்பிறகு தனது சித்தியின் பராமரிப்பில் வளர்ந்தார். அக்கா மகளை தன் சொந்த மகள்போன்று பார்க்க வேண்டிய சித்தியோ பணத்திற்காக சிறுமியை விலைபேசி விற்க ஆரம்பித்தார்.

திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஸ்பாவில் வேலை பார்த்த சித்தி, கூடவே அக்கா மகளையும் அழைத்துச் சென்று அங்கு வரும் ஆண் கஸ்டமர்களின் கண்களுக்கு முதலில் விருந்தாக்கி உள்ளார்.

அடுத்து, பல்க்காக பணத்தை வாங்கிக்கொண்டு அக்ரிமெண்ட் போட்டு மாதக்கணக்கில் சிறுமியை கட்டாயப்படுத்தி அந்த ஆண்களின் பாலியல் தேவைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆரம்பத்தில் மலையாள தேசத்தில் உள்ள ஸ்பாக்களில் மட்டுமே சிறுமியை அடகு வைத்த சித்தி, அடுத்து பெங்களூரு மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைத்ததாக தெரிகிறது.

கூடுவாஞ்சேரியில்...
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு ஸ்பாவில் பல முக்கிய புள்ளிகளின் கட்டுப்பாட்டிலேயே பல மாதங்கள் அடைத்து வைத்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.

நோகாமல் நொடியில் பணம் பார்த்த சித்தியும், அவரது கணவரும் உஷாராக சிறுமியின் வயதையும் ஆதார் கார்டு உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களில் 20 என மாற்றி உள்ளனர். இதற்கு மத்தியில்தான், பூவாரைச் சேர்ந்த 46 வயதான நிஷாந்த் மற்றும் மாவேலிக்கரையைச் சேர்ந்த 47 வயதான சஜித் குமார் ஆகிய இருவரும் சிறுமியை விலைபேசி திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்பாவுக்கு அழைத்து வந்து பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கி உள்ளனர்.

தப்பிய சிறுமி
உடலாலும், மனதாலும் வலிமையிழந்த சிறுமி இரவோடு இரவாக ஸ்பாவில் இருந்து தப்பி ஆந்திரா சென்றார்.

’இனி சம்பாதிக்க முடியாதே’ என்ற ஆத்திரத்தில்தான் சிறுமியை காணவில்லை என போலீசில் புகாரே அளித்துள்ளார் சிறுமியின் சித்தி.

சுகாதார ஆய்வாளருக்கு...
ஆனால், விசாரணையில் சிறுமி சீரழிக்கப்பட்டது முதல் டிஜிட்டல் ஆதாரங்களில் நடந்த கோல்மால்வரை அம்பலமாக சித்தியும், சித்தப்பாவும் ஆந்திராவிற்கு தப்பி ஓடினர். அங்கு விரைந்து சென்ற கேரளம் மாநில போலீசர் தம்பதியை கைது செய்து அழைத்து வந்தனர். அதேபோல், சஜித் குமார், நிஷாந்தையும் கைது செய்தனர்.

நான்கு பேரிடமும் கிடுக்குப்பிடி விசாரணை நடந்து வரும் நிலையில் நிஷாந்தின் ஜிபேயில் இருந்து ஒரு சுகாதார ஆய்வாளருக்கு அடிக்கடி பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால், அவருக்கும் பாலியல் சுரண்டலில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடந்து வருகிறது.

9 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு இந்த விவகாரத்தில் தீவிரமாக இறங்கி உள்ள நிலையில், விரைவில் பல முக்கிய புள்ளிகள் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காவலர் வீரவணக்க நாளில் முதல்வர் விஜய் மரியாதை

43
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved