news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

தென் மாவட்ட ரத்த வரலாறு, ரவுடிகளுக்கு தூபமிடும் "இன்ஸ்டா"

தீராத சாபக்கேடாகும் "ரீல்ஸ்" ரவுடிகள்

60

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ரவுடி சுள்ளான் மதன் கொ* சம்பவத்தை அடுத்து, பழிக்கு பழியாக தலைகள் உருளும் என இன்ஸ்டா ஸ்டோரிகள் வலம் வருவது சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன.

கிணறு தோண்ட கிளம்பிய பூதம் போல இன்ஸ்டா ரவுடிகள் ஆதிக்கம் பரவிக் கிடக்க, இதற்கெல்லாம் மூல காரணமாக இருக்கக் கூடிய சாதிய வலையமைப்பை வேரோடு அறுக்க வேண்டிய கடமை ஏற்பட்டு உள்ளது. தென் மாவட்டங்களின் தீராத சாபக்கேடாக இளைஞர்களை சீரழிக்கும் ரவுடியீச கலாச்சாரத்தை கட்டுப்படுத்த வெறுமனே கைது நடவடிக்கை மட்டும் போதுமானதாக இருக்காது என்பதின் அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித் தொகுப்பு.

ரவுடி சுள்ளான் மதன்...
சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு பார்க்கச் சென்ற ரவுடி சுள்ளான் மதன் வெட்டிக் கொ* செய்யப்பட்டார். இதில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறை கைது செய்து வரும் நிலையில், இன்னொரு பக்கம், ‘சுள்ளான் மதன் கொ*க்கு பழி தீர்ப்போம்’ என சமூக வலைதளங்களில் சிலர் பதிவு போட்டு வருவது பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை கே.டி.சி.நகரில் பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான தீபக் ராஜா வெட்டிக் கொ* செய்யப்பட்டார். இந்த சம்பவத்திலும் இதே மாதிரி இரு தரப்பு ஆதரவாளர்கள், ‘அடுத்தடுத்து தலைகள் சிதறும், கொ*கள் தொடரும்,’ என இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு மிரட்டி வந்தனர்.

தலைகீழாக மாறிய ரவுடியிசம்...
முன்பெல்லாம், ரவுடிகள் தலைமறைவாகவோ அல்லது தங்களுக்குள் ரகசிய கும்பலாகவோ தான் இருப்பார்கள். ஆனால், இன்றைய நிலைமை தலைகீழாக உள்ளது. ரவுடிகளுக்கு தூபமாக மாறி
இருக்கின்றன சமூக ஊடகங்கள்.

அரிவாள், துப்பாக்கியுடன் வலம் வருவது, ஆயுதங்களுடன் அலம்பல் செய்வது என எதிரி கேங்கை சீண்டும் வகையில், சினிமா பஞ்ச் வசனங்களுடன் ரீல்ஸ் போட்டு, கிரைம் ஹிஸ்டரியை பிரபலப்படுத்தும் தளமாக சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகிறது பல ரவுடி கும்பல்.

ஜாமீனில் வந்தாலும்...
கொ* வழக்கில் சிறைக்குச் சென்று ஜாமீனில் வந்தாலும் கூட, அதை கொண்டாட்டமாக ரீல்ஸ் போடும் அளவுக்கு மோசமான சூழல் உருவாகியிருக்கிறது. அந்த ரீல்ஸ் வீடியோக்களுக்கு விழும்
லைக், கமெண்டுகளும், இந்த மாதிரியான சில்வண்டு ரவுடிகளுக்கு ஒரு வித போதையாகவே இருக்கிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்களை ரவுடித்தனத்தை நோக்கி ஈர்க்கும் மிக மிக ஆபத்தான ஆயுதமாக மாறியிருக்கின்றன இந்த ரீல்ஸ் கலாச்சாரம்.

சாதி ஆதிக்கமும்...
சுள்ளான் மதன் மாதிரியான ரவுடிகள் கொ*க்கு பின்னணியில் இரு கும்பலுக்கு இடையேயான முன்விரோத பகை, பழிவாங்கும் எண்ணம் இருந்தாலும், தென் மாவட்டங்களில் பல ஆண்டுகளாக வேரூன்றியிருக்கும் சாதி ஆதிக்கமும் முக்கிய காரணம் என்றே சொல்லலாம்.

இந்த மாதிரியான ரவுடிகள் பெரும்பாலும் சாதியின் நிழலில் தான் ஒளிந்து கொள்கிறார்கள்.

தவறான மன நிலைக்கு...
தென் மாவட்டங்களில் பல ரவுடி குழுக்கள் தங்களை குறிப்பிட்ட சாதியின் காவலர்களாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். சிறு சிறு தனிப்பட்ட மோதல்கள் கூட, சாதிய நிறம் பூசப்பட்டு பெரும் கேங்-வார்களாக மாறுகின்றன.

சில இளைஞர்கள் தாங்கள் சார்ந்த சமூக பெருமைக்கு ஆயுதம் ஏந்துவது தவறு இல்லை என்ற தவறான மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

பள்ளி, கல்லூரி மாணவர்களைக் கூட சாதிக்கயிறுகள் கட்ட வைத்து தங்களின் சுயநலத்திற்காக பகடைக்காய்களாகப் பயன்படுத்துகின்றன இந்த ரவுடி கும்பல்கள். இதற்கெல்லாம் முக்கிய காரணம் தென் மாவட்டங்களில் இயங்கும் சாதிய அமைப்புகள் தான். கட்டப்பஞ்சாயத்து செய்யும் சாதிய அமைப்புகள் தான் இந்த மாதிரியான ரவுடிகளுக்கு முதல் ரோல் மாடல்.

தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பில்லை...
தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி இல்லாத சூழலும், குற்றங்கள் பெருக மிக முக்கிய காரணியாக உள்ளது. சென்னை, கோவை போன்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது தென் மாவட்டங்களில் பெரிய அளவிலான ஐடி நிறுவனங்களோ, தொழிற்சாலைகளோ அல்லது உற்பத்தி ஆலைகளோ இல்லை.

இதனால் முறையான வேலைவாய்ப்பும் கிடைக்காத இளைஞர்கள் மிக எளிதாக சாதியப் பின்னணி கொண்ட ரவுடி கும்பல்களின் வலைக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கமும் இவர்களை எளிதில் குற்றப்பாதைக்கு இழுத்துச் செல்கிறது.

கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ்...
இவற்றையெல்லாம் தடுக்க காவல்துறையினர் வெறும் கைது நடவடிக்கைகளோடு நிறுத்தாமல், தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்ற கட்டாயம் எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் வன்முறையைத் தூண்டும் வகையில் அரிவாள், கத்திகளுடன் ரீல்ஸ் போடும் கணக்குகளைக் கண்டறிந்து, அவர்கள் குற்றத்தில் ஈடுபடும் முன்பே கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் முடக்க வேண்டும்.

ரவுடித்தனத்தின் அடித்தளமாக விளங்கும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்குகளை வேரறுக்க வேண்டும்.

தென் மாவட்டங்களில் சாதியப் பதற்றம் நிறைந்த பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடுவதோடு, இந்த மாதிரியான இன்ஸ்டா ரவுடிகளுக்கு கவுன்சிலிங் மையங்களை உருவாக்கி முறைப்படுத்த வேண்டும்.

Related Link
சுள்ளான் மதன் சம்பவம், அதிர்ச்சி ரிப்போர்ட்

சுள்ளான் மதன் சம்பவம், அதிர்ச்சி ரிப்போர்ட்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காவலர் வீரவணக்க நாளில் முதல்வர் விஜய் மரியாதை

43
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved