news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்தம்

வானிலை ஆய்வு மையம் தகவல்

29

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தமிழ்நாடு கடற்கரைப் பகுதியின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உருவானதாக வானிலை மையம் கூறி உள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...
சென்னை வானிலை ஆய்வு மைய உயரதி​காரி வி.ஆர்.துரை கூறி இருப்பதாவது;
தென்​மேற்கு வங்​கக்​கடல் பகுதி​ மற்​றும் அதனை ஒட்​டிய தமிழக கடலோர பகுதி​களின் மேல் ஒரு வளிமண்​டல சுழற்சி நில​வு​கிறது. இத​னால், அடுத்த 24 மணி நேரத்​தில் ஒரு குறைந்த காற்​றழுத்​தத் தாழ்​வு​ப் ​பகுதி அதே பகுதி​யில் உரு​வாக வாய்ப்​புள்​ளது.

கனமழை, மிக கனமழை
வடக்கு கடலோர ஆந்​திரா பகுதி வரை ஒரு காற்​றழுத்​தத் தாழ்வு பாதை நில​வு​கிறது. இதன் காரண​மாக, அக்டோபர் 21ஆம் தேதி இன்று, தூத்​துக்​குடி, நெல்லை, கன்​னியாகுமரி ஆகிய 3 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை முதல் மிக கனமழை பெய்​யக்​கூடும்.

19 மாவட்டங்களில்...
நீல​கிரி, கோவை, ஈரோடு, திருப்​பூர், நாமக்​கல், கரூர், தேனி, திண்​டுக்​கல், தென்​காசி, மதுரை, விருதுநகர், புதுக்​கோட்டை, தஞ்சை, திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை, புதுக்​கோட்டை, சிவகங்கை, ராம​நாத​புரம் ஆகிய 19 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும், காரைக்​கால் பகுதி​களி​லும் கனமழை பெய்​யக்​கூடும். ஏனைய தமிழகத்​தில் அநேக இடங்​களில் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

அக்டோபர் 22
தூத்​துக்​குடி, நெல்லை, கன்​னியாகுமரி, தென்​காசி, விருதுநகர், ராம​நாத​புரம் ஆகிய 6 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை முதல் மிக கனமழை பெய்​யக்​கூடும்.

நீல​கிரி, கோவை, தேனி, திண்​டுக்​கல், மதுரை, சிவகங்கை, புதுக்​கோட்டை, தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை, அரியலூர், கடலூர், விழுப்​புரம் ஆகிய 14 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகுதி​களி​லும் கனமழை பெய்​யக்​கூடும்.

ஏனைய தமிழகத்​தில் அநேக இடங்​களில் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

அக்டோபர் 24 வரை...
அக்டோபர் 23ஆம் தேதி 25 மாவட்​டங்​கள், அக்டோபர் 24ஆம் தேதி 20 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும் புதுச்​சேரி மற்​றும் காரைக்​காலிலும் கனமழை பெய்​யக்​கூடும்.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய உயரதி​காரி வி.ஆர்.துரை கூறி உள்ளார்.

Related Link
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 சரிவு

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 சரிவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காவலர் வீரவணக்க நாளில் முதல்வர் விஜய் மரியாதை

43
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved