news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

ஐரோப்பிய நாடுகளின் குடியேற்றக் கொள்கைகளை சாடிய டிரம்ப்

ஐரோப்பாவே எஞ்சியிருக்காது

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
டிரம்ப்

இதே போக்கு தொடர்ந்தால், ஐரோப்பாவே எஞ்சியிருக்காது

  • ஐரோப்பிய ஒன்றிய நட்பு நாடுகளின் தாராளமயக் குடியேற்றக் கொள்கைகளை மிகக் கடுமையாகச் சாடிய அதிபர் டிரம்ப் இதே போக்கு தொடர்ந்தால், ஐரோப்பாவே எஞ்சியிருக்காது என்றார்.
  • வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பின் போது, ஐரோப்பிய நாடுகள் அரசியல் நாகரிகம் என்ற பெயரில் செயல்படுவதால்தான் அவை பலவீனமடைந்து வருவதாகவும், சட்டவிரோதமாக உள்ளே நுழைந்தவர்களை உடனடியாக அவர்கள் நாடுகளுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அடுத்த மாதம் பிலிப்பைன்ஸில் குவாட் உச்சிமாநாடு நடைபெறும்

  • அடுத்த மாதம் பிலிப்பைன்ஸில் குவாட் ((Quad)) உச்சிமாநாடு நடைபெற உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார். நவம்பர் 16 ம் தேதி முதல் 18 ம் தேதி வரை நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில், பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப், ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் உலகத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
  • இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, தடையற்ற கடல்வழிப் போக்குவரத்து மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்றவற்றை இந்த மாநாடு நோக்கமாக கொண்டுள்ளது.

இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் உள்ளது

  • இந்தியா-அமெரிக்கா இடையோயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓராண்டுக்கும் மேலாக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் முந்தைய ஒப்பந்தங்களிலிருந்து மிகவும் மாறுபட்டதாக இருக்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
  • கடந்த பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கும் இடையே முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவின் வரி விதிப்புக் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் கூடுதல் பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுத்தது.


Related Link
அமெரிக்க தூதர்களுடன் ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை

அமெரிக்க தூதர்களுடன் ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்தியா அபாரம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved