தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ஓம் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு அந்த படத்தின் இயக்குநர் ராஜ்குமாருக்கு தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் ஃபிலிம்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
வரும் நவம்பர் 20 அன்று, ராஜ்குமார் உருவாக்கிய உலகத்தை உங்கள் அனைவருக்கும் காட்ட ஆவலுடன் காத்திருக்கிறோம் என பதிவிட்டுள்ளது.
2027 மார்ச் 5ல் வெளியாகும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் “எல்லம்மா”
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நடிப்பில் உருவாகி வரும் “எல்லம்மா” திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
வேணு எல்டண்டி இயக்கும் இந்த படத்தில் ருக்மணி வசந்த், பாக்யஸ்ரீ போர்ஸ், அனந்திகா சனில்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
SHARE :
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்