news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

ஒருநாளும் இல்லாத திருநாளாக பர்த்டே, மறுநாளே மாயமான 7 வயது சிறுமி

வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

48

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

விழுப்புரம் அருகே பிறந்த நாள் கொண்டாடிய மறுநாளே திடீரென மாயமான 7 வயது சிறுமியை காடு கரை, மலைக்குன்று, காப்புக்காடு, கொட்டி வைக்கப்பட்டுள்ள சாணி என பல இடங்களில் விடாமல் தேடியும் வழக்கு அடுத்தகட்டத்திற்கு செல்லவில்லை.

இதனிடையே வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

கேக் வெட்டி பிறந்த நாள்...
கடந்த 6 ஆண்டுகளாக கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடாத சிறுமி தனது 7ஆவது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய மறுநாளே விடிந்தும் விடியாமல் காணாமல்போக, இதுவரை எந்த துப்புமே கிடைக்காதது தான் சோகமே.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி
யை அடுத்த ஆலம்பூண்டி கிராமம் குளக்கரை தெருவை சேர்ந்த வடிவேலு-பவானி தம்பதியின் மகள் ஹேமலதா அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

தூங்கிய சிறுமி மாயம்
கடந்த 11ஆம் தேதி மாலையில், புத்தாடை அணிந்து, கேக் வெட்டி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியாக பிறந்த நாள் கொண்டாடிய சிறுமி, இரவில் வழக்கம்போல தனது தாயின் கைமீது தலையை வைத்து தூங்கி உள்ளார். விடிந்ததும் அருகில் மகள் இல்லாததைக் கண்டு பதறிய தாய், தனது உறவினர்களுடன் சேர்ந்து பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

அதன்பிறகு சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

அனைத்து இடங்களிலும்...
மலைக்குன்றுகள், ஏரிகள், விவசாய கிணறுகள், வயல்வெளிகள், கரும்புத்தோட்டம், சிறுவாடி காப்புக்காடு, ஊரில் உள்ள தண்ணீர் தொட்டிகள், சின்டெக்ஸ் டேங்குகள், மாட்டுச்சாணி கொட்டி வைக்கும் இடங்கள், குப்பைத்தொட்டிகள் என ஊரில் உள்ள அத்தனை இடங்களிலும் போலீசார் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு அலசி ஆராய்ந்தனர்.

அதோடு, சிறுமியின் வீட்டிற்கு அருகே உள்ள செல்போன் கோபுரத்தில் பதிவான எண்களைக் கண்டறிந்து, அந்த எண்களின் உரிமையாளர்களின் முகவரிகளையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

சம்பவம் நடந்த அன்றே 60 கிணறுகளை அலசிய தீயணைப்பு வீரர்கள் தற்போது மழைபெய்து வருவதால் மீண்டும் அந்த கிணறுகளில் தேடும் பணியில் ஈடுபட்டனர். தேடும் பணி நீண்டு கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும், சிறுமியின் முடிகூட தென்படவில்லை.

சிசிடிவி ஆய்வில்...
அதேபோல், சிறுமியின் வீட்டில் இருந்து புதுச்சேரி-கிருஷ்ணகிரி பைபாஸ் சாலை 1 கிலோமீட்டர் தூரத்திலேயே உள்ளதால் அவ்வழியாக சென்ற வாகனங்களை சிசிடிவி கேமராக்களில் ஆராய்ந்தனர்.

அதில், ஜிப்மருக்கு சென்ற ஒரு கார் மற்றும் வழக்கம்போல அதிகாலையில் காய்கறி மார்க்கெட்டுக்கு சென்ற ஆட்டோ மட்டும்தான் சிக்கியது. ஆனால், அவர்களுக்கு சிறுமியை பற்றிய எந்த தகவலுமே தெரியவில்லை.

அதேபோல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 600க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் பதிவுகளையும் போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

ரூ.2 லட்சம் பரிசு
இதனிடையே, சிறுமியைக் கண்டுபிடித்துத் தருவோருக்கு ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு அதுதொடர்பான போஸ்டர்களும் செஞ்சி பகுதியில் ஒட்டப்பட்டுள்ளன.

சிறுமி மாயமான வழக்கில் ஏற்கெனவே 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தேடுதல் நடைபெற்று வந்தது. பின்னர் முழுக்க முழுக்க பெண் போலீசாரைக் கொண்ட மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆக மொத்தம் 10 தனிப்படைகள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சிபிசிஐடிக்கு மாற்றம்
வழக்கமாக தன்னை அணைத்தபடிதான் சிறுமி உறங்குவார் என்றும் கடந்த பத்து நாட்களாக சாப்பிட்டாளோ இல்லையோ என கண்ணீர் வடித்த தாய் பவானி, தங்களுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை என புலம்பினார்.
மேலும், தங்களுக்கு யார் மீதும் சந்தேகமும் இல்லை, பணம், நிலம் என யாருடனும் எந்த பிரச்சினையுமே இல்லையெனவும் கூறினார்.

சிறுமி குறித்து சிறு துரும்பும் கிடைக்காததல் வெளிமாநில நபர்கள் யாரேனும் கடத்தி சென்று விற்பனை செய்திருக்கலாம் என்றகோணத்தில் ஒருபுறம் விசாரணை நடந்து வருகிறது.

அதேபோல், தனிப்படை போலீசார் தெலுங்கானாவிற்கும் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Related Link
காப்பாளர் போர்வையில் கொடூரன், சிறுவனிடம் வன்புணர்வு

காப்பாளர் போர்வையில் கொடூரன், சிறுவனிடம் வன்புணர்வு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மிக கனமழை வருகிறது என வானிலை மையம் தகவல், உருவாகிறதா அர்னாப் புயல்?

18
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved