சட்டை கசங்காமல் ரூ.500 கோடி வசூல் ரஜினியால் மட்டும் முடியும்
சட்டை கூட கசங்காமல் 500 கோடி ரூபாய் வசூலிப்பதெல்லாம் ரஜினியால் மட்டுமே முடியும் என நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். பார்ப்பவர்களை இருக்கையின் நுனிக்கே வரவழைக்கும் விறுவிறுப்பான கமர்ஷியல் எண்டர்டெயினர் ரஜினி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயிலர் 2 எதிரொலி - டெலிவரி பாய் ரிலீஸ் தள்ளிவைப்பு
ரஜினியின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் ‘டெலிவரி பாய்’ படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. அக்டோபர் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு முதலில் அறிவித்திருந்த நிலையில், தற்போது 27 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ். ராஜமௌலி ஹாலிவுட் படம் இயக்கத் திட்டம்
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி ஹாலிவுட் படம் இயக்கத் திட்டமிட்டுள்ளார், தற்போது மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் வாரணாசி படத்தை முடித்த பிறகு, ஹாலிவுட் பட வாய்ப்புகள் குறித்து பரிசீலிப்பதாக போர்ச்சுகீசிய ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.