news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

குழந்தைகள் தினத்தில், மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு

ரூ.7.54 கோடியில் 4 நிறுவனங்களிடம் கொள்முதல்

36

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணாக்கர்களுக்கு வழங்க, 7 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் கேக் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
பிரிட்டானியா, ட்ரீம் பேக், எலைட் நேச்சுரல், ஐடிசி ஆகிய 4 நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ய தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

குழந்தைகள் தினத்தில்...
நவம்பர்-14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவர்களை மகிழ்விக்கும் வகையில், புதிய திட்டத்தை முதலமைச்சர் விஜய் அறிமுகப்படுத்தி உள்ளார். இதன்படி, அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கேக் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

45 கிராம் எடையுள்ள Mixed Fruit, Classic Vanilla, Rich Chocolate ஆகிய மூன்று சுவையில், மாணவர்களுக்கு கேக் வழங்கப்பட உள்ளது.

மொத்தம் 61 லட்சத்து 84 ஆயிரத்து 566 ஸ்பாஞ்ச் கேக் வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. நவம்பர் 14ஆம் தேதி தரும் வகையில், குறைந்தது அடுத்த 30 நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் வகையில் தயாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

7.54 கோடி ரூபாயில் 62.46 லட்சம் கேக் வழங்க 4 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எந்தெந்த நிறுவனங்கள்...?
DREAM BAKE நிறுவனம் சேலம், தஞ்சை, மதுரை, திருச்சி, திருவண்ணாமலை உட்பட 20 மாவட்டங்களுக்கு கேக் தயாரித்து வழங்க உள்ளது.
BRITANNIA நிறுவனம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை என 6 மாவட்டங்களுக்கு கேக் தயாரித்து வழங்க உள்ளது.

ELITE NATURAL நிறுவனம் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல் என 6 மாவட்டங்களுக்கு கேக் தயாரித்து வழங்க உள்ளது.
ITC - Sunfeast நிறுவனம் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், கரூர் என 6 மாவட்டங்களுக்கு கேக் தயாரித்து வழங்க உள்ளது.

Related Link
உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நவம்பர் 4-ல் ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved