Also Watch
Read this
தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக, நாளை வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அடுத்த 2 நாளில்...
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் திங்கள்கிழமை அர்னாப் புயலாக மாற அதிக வாய்ப்பு உள்ளது என்றும், அடுத்த 2 நாட்களில் வலுவடைந்து, வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரை பகுதியில் கரை கடக்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

மிக கன மழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என்று மூன்று மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்தது.
ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

ஐந்து நாட்களுக்கு...
தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை தெரிவித்துள்ளார்.
அதேபோன்று சென்னையில் 24,25 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பை வெளியிட்டனர்.
திருவண்ணாமலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. கனமழை பெய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. கனமழை எச்சரிக்கை காரணமாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved