Also Watch
Read this
By: Manigandan Raja

கேரளம் அரசின் போதைப்பொருள் தடுப்பு தூதர்
கேரளம் அரசின் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் நல்லெண்ணத் தூதராக நடிகர் பிரசாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அந்த மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா வெளியிட்ட பதிவில், கேரள மாநிலத்தின் ‘ஆபரேஷன் டூஃபான்’-ன் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை முன்னணி களப்பணியாளராக பிரசாந்த் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு படத்துக்கு உதவவில்லை
தன்னுடைய படத்தை யூடியூபில் வெளியிடப் போவதாகவும், மக்கள் தனக்கு ஆதரவு அளிப்பார்கள் என நம்புவதாகவும் ஒன் மேன் திரைப்படத்தின் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், கொஞ்ச காலம் சினிமாத்துறையில் இருந்து விலகி விவசாயம் மற்றும் தெருக்கூத்து செய்யலாம் என முடிவு செய்துள்ளேன் எனகூறியுள்ளார்.
9 நாட்களில் ரூ.150 கோடி வசூல் வேட்டை
ரவி தேஜா நடிப்பில் வெளியான ‘இருமுடி கட்டு’ திரைப்படம் முதல் 9 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சிவ நிர்வாணா இயக்கிய இப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார்.

சாய் குமார், பேபி நக்ஷத்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved