Also Watch
Read this
By: Manigandan Raja

சிறப்பு வீடியோ வெளியிட்ட சோனி மியூசிக் நிறுவனம்
வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த மங்காத்தா திரைப்படம் வெளியாகி 15ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சோனி மியூசிக் நிறுவனம் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அஜித்துக்கு 50ஆவது திரைப்படமாக வெளியவந்த மங்காத்தா, அவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
புதிய திரைப்படத்தில் இணையும் ஷங்கர்-முருகதாஸ்
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களான ஷங்கரும், ஏ.ஆர்.முருகதாஸும் புதிய திரைப்படம் ஒன்றில் இணைய திட்டமிட்டுள்ளனர். அதாவது சமூக கருத்துள்ள கதை ஒன்றை முருகதாஸ் எழுத, அக்கதையை ஷங்கர் இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஷங்கர் கடைசியாக கார்த்திக் சுப்புராஜ் எழுதிய 'GAME CHANGER' திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved