Also Watch
Read this
By: Manigandan Raja

இசை தனக்கான பாதை
இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தைப் போற்றும் வகையில, ஆஸ்திரேலியாவோட விக்டோரியா நாடாளுமன்றத்துல அவருக்கு சிறப்பு கவுரவம் வழங்கப்பட்டுருக்கு. மெல்போர்னில் செப்டம்பர் 22ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், Australia Post சார்பில் இளையராஜாவின் புகைப்படம் இடம்பெற்ற வரையறுக்கப்பட்ட பதிப்பிலான சிறப்பு அஞ்சல் தலைகள அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுருக்கு. இந்த அஞ்சல் தலைகளை விக்டோரியா மாநில நிதியமைச்சர் Enver Erdogan MP வெளியிட்டு, இளையராஜாவிடம் வழங்கினாரு.

திரையுலகில் இளையராஜா இசையமைக்கத் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்று வரும் ‘Ilaiyaraaja 50’ உலக் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு நடந்தது ரசிகர்கள் மத்தியில கூடுதல் மகிழ்ச்சிய ஏற்படுத்தியிருக்கு. தமிழ்நாட்டின் ஒரு சிறிய, தொலைதூர கிராமத்துல பிறந்த நான், இசை மூலமா திரைப்பட ஸ்டுடியோக்கள், இசை நிகழ்ச்சி அரங்குகள் என உலகம் முழுவதும் பயணிச்சிருக்கேன்னும், இந்தப் பயணம் இவ்வளவு தூரம் செல்லும் என்று ஒருபோதும் நினைச்சதில்ல, ஆனால், இசை தனக்கான பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டதுன்னு இசைஞானி தெரிவிச்சாரு.
L.K அக்சய் குமார் நடிக்கும் புதிய கிரைம் டிராமா
‘சிறை’ படத்தின் மூலம் கவனம் பெற்ற L.K அக்ஷய் குமார் நடிக்கும் புதிய கிரைம் டிராமா திரைப்படம், அறிமுக இயக்குநர் விஷ்ணு அமரன் இயக்கத்துல பூஜையோட இனிதே தொடங்கியிருக்கு. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் S. S. லலித் குமார் தயாரிக்கும் இப்படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, சேத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறாங்க.
இந்த படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, சேத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்கள்ல நடிக்கிறாங்க. சென்னை, கொடைக்கானல், கொல்கத்தா பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ள இந்த படம், வித்தியாசமான கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களால் புதிய அனுபவம் தரும் என எதிர்பார்க்கப்படுது. கிரைம் டிராமா ஜானரில் உருவாகும் இப்படத்தோட படப்பிடிப்பும் இன்னைக்கே தொடங்கி இருக்கு.
சினிமா நம்மை தேடி வரும் - The Dark Heaven சக்சஸ் மீட்டில் நடிகர் சித்து
பாலாஜி இயக்கத்தில், சித்து சித் (Sidhu Sid) மற்றும் தர்ஷிகா முதன்மை கதாபாத்திரங்களில் நடிச்சு சமீபத்துல வெளியான க்ரைம்-மிஸ்டரி திரைப்படம் 'தி டார்க் ஹெவன்' (The Dark Heaven). இந்தப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதைத் தொடர்ந்து, படத்தோட சக்சஸ் மீட் நடந்துச்சு. நிகழ்ச்சியில நடிகர் சித்து கலந்துகொண்டு தனது மகிழ்ச்சியையும், படம் குறித்த அனுபவங்களையும் பகிர்ந்துகிட்டாரு. அப்போ பேசுன அவரு, இந்தத் தருணத்துக்காக நான் 14 வருஷமா காத்திருந்தேன்.

சாலிகிராமத்துல ஒரு சின்ன ரூம்ல தங்கிக்கிட்டு சினிமா வாய்ப்பு தேடிக்கிட்டிருந்தேன். இப்போ நான் ஆசைப்பட்ட மாதிரி, பல ஊர்கள்ல தியேட்டருக்குப் போகும்போது நான் நடித்த படத்தின் ஹவுஸ்ஃபுல் காட்சிகளைப் பார்க்கிறேன்னு நெகிழ்ச்சியோட சொன்னாரு ‘ஜிகர்தண்டா’ படத்துல ஒரு வசனம் வரம், சினிமாவை மதிச்சா, அது திரும்பத் திரும்ப நம்மைத் தேடி வரும்னு. அதை நான் இப்போ உணர்ந்திருக்கேன்ன்னு உணர்ச்சி பொங்க சொன்னாரு சித்து.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved