news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews மகன் படத்துக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ள அப்பாவின் படம்
tv

Also Watch

மகன் படத்துக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ள அப்பாவின் படம்

திருப்பாச்சி

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திருப்பாச்சி

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள "சிக்மா" திரைப்படம் அக்.2 ரிலீஸ்

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகி உள்ள "சிக்மா" திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் நடித்துள்ள திருப்பாச்சி திரைப்படத்தின் ரீ ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 1-ம் தேதியன்று திருப்பாச்சி திரைப்படம் திரையரங்குகளில் ரீ ரிஸீல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விநியோகஸ்தர்களான திருப்பதி ஃபிலிம்ஸ் இந்த புதிய முடிவை அறிவித்துள்ளனர். "சிக்மா" திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சசிக்குமார், சமுத்திரக்கனி மீண்டும் இணையும் புதிய படம்

பிரபல இயக்குநர்கள் சசிக்குமாரும், சமுத்திரக்கனியும் மீண்டும் இணைந்து நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. சமுத்திரக்கனி இயக்கி நடிக்கும் ‘ஸ்கூல் பஸ்’ திரைப்படத்தில் சசிகுமார், கிச்சா சுதீப், மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கன்னடம் மற்றும் தெலுங்கில் ஏற்கெனவே வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழிலும் ‘School Bus’ திரைப்படம் குறித்த பிரம்மாண்டமான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

"நீலாம்பரி" ரம்யா கிருஷ்ணனின் 55-வது பிறந்தநாள்

ரம்யா கிருஷ்ணனின் 55-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் டேவிட் ரெட்டி திரைப்படத்தின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் சிறப்பு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில், எதிரிகளை வீழ்த்திய பிறகு சிம்மாசனத்தில் அமர்ந்து கையில் வாளுடன் மிகவும் கம்பீரமான தோற்றத்தில் அவர் காட்சியளிக்கிறார்.

தெலுங்கில் ஹனுமா ரெட்டி யக்கந்தி இயக்கத்தில், மஞ்சு மனோஜ் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் மரியா ரியா போஷாப்கா கதாநாயகியாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன் கமலா ரெட்டி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Related Link
சூர்யா, ஜோதிகாவின் காணொலிக்கு 3.3 மில்லியன் Likes

சூர்யா, ஜோதிகாவின் காணொலிக்கு 3.3 மில்லியன் Likes

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரேபிடோ நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved